ஜெயிலானி வழிபாட்டுத்தலத்தின் நுழைவாயில் அழிப்புக்கு முஸ்லிம் அமைப்புகள் கண்டனம்

ஜெயிலானி வழிபாட்டுத்தலத்தின் நுழைவாயில் அழிப்புக்கு முஸ்லிம் அமைப்புகள் கண்டனம்-Condemned Joint Statement-Dafthar-Jailani-Demolished

- நாசதாரிகளை கைது செய்ய கோரிக்கை

முஸ்லிம்களின் பழைமை வாய்ந்த வணக்கஸ்தலமான ஜெயிலானி இனந்தெரியாத சக்திகளால் நாசமாக்கப்பட்டதற்கு உலமா சபை, முஸ்லிம் கவுன்ஸில், முஸ்லிம் மீடியா போரம், YMMA உள்ளிட்ட பல முஸ்லிம் அமைப்புகள் மற்றும் சிவில் அமைப்புகள் வன்மையாகக் கண்டித்துள்ளன.

இதனுடன் தொடர்புள்ள நபர்களை கைது செய்து தண்டிக்குமாறும் இவ்வாறான தொல்பொருள் முக்கியமான இடங்களை அழிப்பதை தடுக்குமாறும் அவை கோரியுள்ளன. சுமார் 26 அமைப்புகளின் கையொப்பத்துடன் இது தொடர்பில் நேற்று கூட்டறிக்கையொன்று வெளியிடப்பட்டது.

வரலாற்றுப் புகழ்மிக்க இடங்கள், வழிபாட்டுத்தலங்கள் அழிக்கப்படுவதை வன்மையாக கண்டிப்பதாகவும் தப்தர் ஜெயிலானியை அழிக்க முயன்றவர்களை கண்டறிந்து கைது செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவை கோரியுள்ளன.

முஸ்லிம்களின் கலாசார முக்கியத்துவம் வாய்ந்த ஜெயிலானி குறித்து பல ஆய்வாளர்கள் தமது நூல்களில் குறிப்பிட்டுள்ளனர். அத்தகைய இடம் நாசதாரிகளால் அழிக்கப்பட்டுள்ளதை அனுமதிக்க முடியாது எனவும் அவை சுட்டிக்காட்டியுள்ளன. (பா)


Add new comment

Or log in with...