பால்மா, கோதுமை மா, சீமெந்து விலைகள் : வாழ்க்கைச் செலவு குழுவின் ஆலோசனையை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்க முடிவு

பால்மா, கோதுமை மா மற்றும் சீமெந்து ஆகியவற்றின் விலைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு தொடர்பில் வாழ்க்கைச் செலவு குழுவின் யோசனையை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் திங்கட்கிழமை அதனை அமைச்சரவையில் சமர்ப்பிக்க உள்ளதாகவும் அது தொடர்பான இறுதித் தீர்மானத்தை அமைச்சரவை மேற்கொள்ளும் என்றும் வாழ்க்கைச் செலவு தொடர்பான குழுவின் அங்கத்தவரும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருமான லசந்த அழகியவன்ன நேற்று தெரிவித்தார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் நேற்றைய தினம் வாழ்க்கைச் செலவு குழு கூட்டம் சூம் தொழில்நுட்பம் ஊடாக நடைபெற்றுள்ளது. இதன்போது பால்மா, கோதுமை மா மற்றும் சீமெந்து ஆகியவற்றின் விலைகள் அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் அத்தியாவசியப் பொருட்களை துறைமுகத்திலிருந்து விடுவிக்காமை தொடர்பான பிரச்சினைகளும் ஆராயப்பட்டன.

அமைச்சரவையில் சமர்ப்பிக்கத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வாழ்க்கைச் செலவு குழுவின் யோசனைகள் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கும் சந்தர்ப்பம் அமைச்சரவைக்கு உள்ளதாகவும் விலைகளை அதிகரிப்பது அல்லது அதிகரிக்காமல் விடுவது தொடர்பில் அமைச்சரவையே தீர்மானிக்கும் என்றும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்