ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் செப். 27இல் இலங்கைக்கு

ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் செப். 27இல் இலங்கைக்கு-EU Union Delegation to Visit Sri Lanka-Jayanath Colombage

ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்வரும் செப்டெம்பர் 27ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

வெளியுறவு அமைச்சின் செயலாளர் அட்மிரல் (பேராசிரியர்) ஜயநாத் கொலம்பகே இதனைத் தெரிவித்தார்.

இதன்போது ஐரோப்பிய ஒன்றிய தூதுவர்கள் GSP+ சலுகைகள் குறித்து இலங்கை அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபடுவார்களென எதிர்பார்க்கப்படுகிறது.