3rd T20; SLvSA: தென்னாபிரிக்கா இலங்கையை 3-0 என Whitewash செய்தது

3rd T20; SLvSA: தென்னாபிரிக்கா இலங்கையை 3-0 என Whitewash செய்தது-3rd T20-SLvSA-SA Won the Match by 10 Wickets-Series Won by 3-0

- 3ஆவது போட்டி 10 விக்கெட்டுகளால் வெற்றி

சுற்றுலா தென்னாபிரிக்க அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையில் ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இன்று (14) இடம்பெற்ற ரி20 கிரிக்கெட் தொடரின் 3ஆவது போட்டியை 10 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது தென்னாபிரிக்க அணி.

போட்டியில் நாணயச்சுழற்சியில் இன்றும் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 120 ஒட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பில் இன்றைய போட்டியிலும் ஆகக் கூடுதலாக ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் குசல் பெரேரா 39 (33) ஓட்டங்களை பெற்றதோடு, சாமிக கருணாரத்ன 24 (19), தசுன் சானக்க 18 (26) ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் தென்னாபிரிக்க அணி சார்பில் ஜோர்ன் போர்டுயின் மற்றும் ககிசோ ரபடா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பதிலுக்கு 121 எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, 14.4 ஓவர்களில் எவ்வித விக்கெட்டுகளையம் இழக்காது வெற்றி இலக்கை கடந்து 121 ஒட்டங்களை பெற்றது.

அவ்வணி சார்பில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான குயின்டன் டி கொக் 59 (46) ஓட்டங்களையும், றீசா ஹெண்ரிக்ஸ் 56 (42) ஓட்டங்களையும் பெற்றனர்.

இலங்கை அணியின் பந்துவீச்சாளர்களால் எவ்வித விக்கெட்டுகளையும் பெற முடியாமல் போனது. ஒரேயொரு ஓவரை வீசிய தசுன் சானக்க 14 ஓட்டங்களை வழங்கியிருந்தார் என்பது விசேட அம்சமாகும்.

அந்த வகையில் இரு அணிகளுக்கிடையிலான 3 போட்டிகளைக் கொண்ட ரி20 தொடரில் 3 போட்டிகளையும் தன்வசப்படுத்திய தென்னாபிரிக்க அணி 3-0 என தொடரை முழுமையாக (Whitewash) கைப்பற்றியுள்ளது.

இரு அணிகளுக்குமிடையிலான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை இலங்கை அணி 2-1 என வெற்றி கொண்டு, ஒன்றரை வருடங்களின் பின் ஒரு நாள் தொடரையும் 8 வருடங்களின் பின் தென்னாபிரிக்காவுடனான தொடரையும் வெற்றி கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த ரி20 தொடரின் ஆட்டநாயகனாகவும் தொடரின் நாயகனாகவும் தென்னாபிரிக்க அணியின் விக்கெட் காப்பாளர் குயின்டன் டி கொக் தெரிவானார்.

SRI LANKA INNINGS (20 OVERS MAXIMUM)
BATTING   R B M 4s 6s SR
Kusal Perera  lbw b Maharaj 39 33 56 3 0 118.18
Avishka Fernando  c & b Rabada 12 8 11 2 0 150.00
Dhananjaya de Silva  st †de Kock b Fortuin 1 3 3 0 0 33.33
Bhanuka Rajapaksa   b Rabada 5 6 9 1 0 83.33
Kamindu Mendis  c Maharaj b Markram 10 16 21 0 0 62.50
Dasun Shanaka (c) c van der Dussen b Mulder 18 26 36 2 0 69.23
Wanindu Hasaranga de Silva  c Maharaj b Fortuin 4 4 5 0 0 100.00
Lahiru Madushanka  run out (van der Dussen/†de Kock) 1 3 4 0 0 33.33
Chamika Karunaratne  not out 24 19 24 0 2 126.31
Dushmantha Chameera  not out 2 2 8 0 0 100.00
Extras (lb 1, w 3) 4  
TOTAL (20 Ov, RR: 6.00) 120/8  
Did not bat: Maheesh Theekshana 
Fall of wickets: 1-18 (Avishka Fernando, 1.5 ov), 2-19 (Dhananjaya de Silva, 2.2 ov), 3-28 (Bhanuka Rajapaksa, 3.6 ov), 4-62 (Kamindu Mendis, 9.3 ov), 5-80 (Kusal Perera, 12.6 ov), 6-85 (Wanindu Hasaranga de Silva, 13.5 ov), 7-86 (Lahiru Madushanka, 14.2 ov), 8-101 (Dasun Shanaka, 18.2 ov)
BOWLING O M R W ECON 0s 4s 6s WD NB
Bjorn Fortuin 4 0 21 2 5.25 12 1 0 2 0
Kagiso Rabada 3 0 23 2 7.66 7 3 0 0 0
Dwaine Pretorius 2 0 19 0 9.50 3 3 0 0 0
Tabraiz Shamsi 4 0 27 0 6.75 7 1 1 0 0
Aiden Markram 2 0 4 1 2.00 8 0 0 0 0
Keshav Maharaj 4 1 14 1 3.50 12 0 0 0 0
Wiaan Mulder 1 0 11 1 11.00 1 0 1 0 0
 
 
SOUTH AFRICA INNINGS (TARGET: 121 RUNS FROM 20 OVERS)
BATTING   R B M 4s 6s SR
Reeza Hendricks  not out 56 42 70 5 1 133.33
Quinton de Kock  not out 59 46 70 7 0 128.26
Extras (w 6) 6  
TOTAL (14.4 Ov, RR: 8.25) 121  
BOWLING O M R W ECON 0s 4s 6s WD NB
Maheesh Theekshana 4 0 28 0 7.00 10 4 0 1 0
Wanindu Hasaranga de Silva 4 0 35 0 8.75 7 5 0 0 0
Kamindu Mendis 3 0 22 0 7.33 7 1 1 0 0
Dushmantha Chameera 1 0 9 0 9.00 2 0 0 1 0
Chamika Karunaratne 1.4 0 13 0 7.80 1 0 0 0 0
Dasun Shanaka 1 0 14 0 14.00 0 2 0 0 0