60 வயதிற்கு, 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு மூன்றாவது தடுப்பூசி

இலங்கை மருத்துவர்கள் சங்கம் வேண்டுகோள்

நோய் எதிர்ப்பு சக்தி குறைவடைந்து பலவீனமாகக் காணப்படும் 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் மூன்றாவது தடுப்பூசியை வழங்குவது அவசியம் என இலங்கை மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேற்படி சங்கத்தின் விசேட குழுவானது நாட்டை முடக்கியதன் முழுமையான பிரதிபலனை பெற்றுக் கொள்ள வேண்டுமானால் தொடர்ந்தும் இம்மாதம் 18ஆம் திகதி வரை அல்லது அக்டோபர் 2ஆம் திகதி வரை நாட்டில் தனிமைப்படுத்தலுக்கான ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது அவசியம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.

60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 12 வயதுக்கு மேற்பட்ட நோய் எதிர்ப்பு தன்மையில் பலவீனமானவர்கள் ஆகியோருக்கு மூன்றாவது தடுப்பூசியாக பைசர், எஸ்ட்ரா செனேகா மற்றும் மொடர்னா தடுப்பூசிகளை பெற்றுக் கொடுக்க முடியும் என்றும் ஆலோசனை வழங்கியுள்ளது.

அதேவேளை நோய் எதிர்ப்பு சக்தியில் பலவீனமானவர்கள், சைனோ பாம் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ள 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும் இரண்டாவது தடுப்பூசி வழங்கப்பட்ட 28 தினங்களுக்கு பின்னர் மூன்றாவது தடுப்பூசியை வழங்க முடியும் என்றும் அக்குழு தெரிவித்துள்ளது.

லோரன்ஸ் செல்வநாயகம்

 

Add new comment

Or log in with...