கொவிட்-19: இந்தோனேசியாவில் ஒரே நாளில் 2,000 பேர் உயிரிழப்பு

இந்தோனேசியாவில் ஒரே நாளில், முன்னெப்போதும் இல்லாத வகையில், 2,000க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

சில பகுதிகளில் வைரஸ் தொற்றுக்குப் பலியானோர் எண்ணிக்கை திருத்தப்பட்டதாகவும், சில பகுதியில் அந்த எண்ணிக்கை கூடியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

எளிதில் தொற்றக்கூடிய டெல்டா வகைத் தொற்றால், இந்தோனேசியாவில் இம்மாதம் வைரஸ் தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

அதன் மக்கள் தொகையில் சுமார் 7 வீதத்தினர் மட்டுமே முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

இந்தோனேசியாவில் நிலவும் தடுப்பூசிப் பற்றாக்குறையால் ஆயிரக்கணக்கான வெளிநாட்டினர் வெளியேறிவிட்டனர்.

இம்மாதம் மட்டுமே சுமார் 19,000 பேர் தலைநகர் ஜக்கர்த்தாவிலிருந்து புறப்பட்டதாக, விமான நிலையத் தகவல்கள் கூறுகின்றன. அவர்களில் பெரும்பாலானோர் ஜப்பான், சீனா, தென் கொரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

 


Add new comment

Or log in with...