இந்தியாவுடனான இரண்டாவது ஆட்டம் இலங்கை அணி 9 /275 ஓட்டங்கள்

இந்திய அணியுடனான இரண்டாவது போட்டியில் இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 275 ஓட்டங்களை குவித்தது.

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான 2 வது ஒருநாள் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.இப் போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமானது. இலங்கை அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களாக அவிஸ்க பெர்னாண்டோ மற்றும் மினோத் பானுக்கு இருவரும் களமிறங்கினர்.

இருவரும் நிதானமாக ஆடிய வேளையில் மினோத் பானுக்க 36 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து சென்றார்.பின்னர் வந்தார் பானுக்க ராஜபக்ஷ அவரும் வந்த வேகத்தில் டக்அவுட் முறையில் ஆட்டமிழந்து சென்றார்.பின்னர் அவிஸ்கவுடன் இணைந்தார் தனஞ்சய டி சில்வா அவரும் தனக்கு உரிய பாணியில் ஆடிக்கொண்டிருந்த போது 32 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் தனது அரைச்சதத்தை பூர்த்தி செய்த அவிஸ்க பெர்ணான்டோ 50 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.பின்னர் இணைந்தார் சரித் அசலங்க இலங்கை அணிக்கு நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்து 65 ஓட்டங்கள் பெற்ற நிலையில் ஆட்டமிழந்து சென்றார் .பின்னர் அணியின் தலைவர் சானக்க அவரும் நின்று ஆடுவார் என்ற நிலையில் 16 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க வனிந்து ஹசரங் 8 ஓட்டங்களுக்கும் துஸ்மந்த சமீர இரண்டு ஒட்டங்களுக்கும் சந்தகன் ஓட்டம் எதுவும் பெறாமல் ஆட்டமிழக்க இலங்கை அணிக்கு கடந்த போட்டியில் சிறப்பாக ஆடிய சாமிக்க கருணாரத்தன 44 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்து பின்வரிசையில் நம்பிக்கையாக ஆடி ஓட்ட வேகத்தை அதிகரித்தார்.கசுன் ராஜித்த ஓரு ஓட்டத்துடன் ஆட்டமிழக்காமல் இருக்க இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 275 ஓட்டங்களை பெற்றது.பந்து வீச்சில் சஹால் மற்றும் குமார் தலா 3 விக்கெட்டுக்களையும் தீபக் சஹார் இரண்டு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்

இலங்கை அணி ஒரு மாற்றம் டெம்பெற்றது உதானவுக்கு பதிலாக கசுன் ராஜித சேர்க்கப்பட்டார்.இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை..

இலங்கை அணி.

அவிஷ்க பெர்னாண்டோ, மினோத் பானுக (விக்கெட் காப்பாளர் ), பானுக ராஜபக்ச, தனஞ்சய டீ சில்வா , சரித் அசலங்க, தசுன் ஷனாக (தலைவர் ), வாணிந்து ஹசரங்க, சமிக்க கருணாரத்ன, துஷ்மந்த சமீரா, கசுன் ராஜித, லக்ஷன் சந்தகன்

இந்தியா

ப்ரித்வி ஷா, ஷிகர் தவான் (தலைவர் ), இஷான் கிஷன் (விக்கெட் காப்பாளர்), மனிஷ் பாண்டே, சூர்யகுமார் யாதவ், ஹர்டிக் பாண்டியா, குருநல் பாண்டியா, புவனேஸ்வர் குமார், தீபக் சஹர், குல்தீப் யாதவ் , சஹால்

முதலாவது போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகளால் இலங்கை அணியை வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...