இந்திய அணியுடனான முதல் ஆட்டம் இலங்கை 9 /262 ஓட்டங்கள் குவிப்பு

இரு அணியிலும் 3 வீரர்கள் அறிமுகம்

இலங்கை -இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது போட்டியில் நாணயச் சுழற்சியில் இலங்கை அணியின் தலைவர் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.அதற்கு அமைவாக இலங்கை அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களாக விக்கெட் காப்பாளர் மினோத் பானுக்க மற்றும் அவிஸ்க பெர்ணான்டோ ஆகியோர் களமிறங்கினர் இருவரும் நிதானமாக ஆடுவார்கள் என்ற நிலையில் அவிஸ்க பெர்ணான்டோ 32 ஓட்டங்கள் பெற்ற போது ஆட்டமிழந்து சென்றார்.

பின்னர் பானுக்கவுடன் களமிறங்கினார் பானுக்க ராஜபக்‌ஷ.இது அவரது தனது அறிமுக போட்டியில் களமிறங்கிய அவர் இலங்கை ரசிகர்களுக்கு நல்லதொரு ஆட்டத்தை வழங்குவார் என்ற நிலையில்

அவர் 24 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து சென்றார்.பின்னர் பானுக்கவுடன் களமிறங்கினார்.தனஞ்சய டி சில்வா.பின்னர் பானுக்க 27 ஓட்டங்கள் பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார்.

தனஞ்சய டி சில்வாவுடன் ஜோடி சேர்ந்தார்.சரித் அசலங்க நிதானமாக ஆடுவார் என்ற நிலையில் தனஞ்சய டி சில்வா 14 ஓட்டங்ஙகளுக்கு ஆட்டமிழந்தார்.பின்னர் சரித் அசலங்கவுடன் இணைந்தார் அணியின் தலைவர் தசுன் சானக்க இருவரும் நன்றாகவும் நிதானமாகவும் ஆடிய நிலையில் சரித் அசலங்க 38 ஓட்டங்கள் பெற்றநிலையில் ஆட்டமிழந்து செல்ல சானக்கவுடன் இணைந்தார் வனிந்து ஹசரங்க. அவரும் நன்றாக ஆடுவார் என்ற நிலையில் 8 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து சென்றார். அதன் பின் நன்றாக ஆடிய தலைவர் சானக்க 38 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

கருணாரத்னவுடன் ஆடிய உதான 8 ஓட்டங்களையும் துஸ்மந்த சமீர 13 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழக்க கருணாரத்தன 43 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தார் 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டையும் இழந்து 262 ஓட்டங்கள் பெற்றது.

பந்து வீச்சில் தீபக் ஷகர்,யுவேந்திர ஷகல்,குல்திப் யாதேவ் ஆகியோர் தலா இரு விக்கெட்டையும் குருணல் பான்டியா ,ஹார்த்திக் பான்டியா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இலங்கை,இந்திய

அணியில் 3 அறிமுகங்கள்

இலங்கை கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் இந்திய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகள் கொண்ட தொடர் ஆரம்பித்திருக்கிறது.

இலங்கை, இந்திய அணிகள் சார்பில் நேற்று 3 அறிமுகங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இலங்கை அணி சார்பில் பானுக்க ராஜபக்சவிற்கு அறிமுகம் கொடுக்கப்பட்டது, இந்தியாவைப் பொறுத்தவரையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐபிஎல்லில் கலக்கிய இஷன் கிஷன் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகிய வீரர்கள் அணியில் வாய்ப்பு பெற்றறனர். லங்கையைப் பொறுத்தவரையில் 2017ஆம் ஆண்டுக்குப் பின்னர் பத்தாவது தலைவரின் கீழ் இலங்கை அணி ஒருநாள் போட்டிகளில் இந்தியாவை சந்திக்கின்றமை முக்கியமானது.

 

இந்தியா: ஷிகர் தவான் (தலைவர்), பிரித்வி ஷா, சூர்யகுமார் யாதவ், மனிஷ் பாண்டே, இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா, குருணல் பாண்ட்யா, புவனேஷ்வர்குமார், தீபக் சாஹர், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல்.

இலங்கை: தசுன் ஷானக (தலைவர்), மினோட் பானுக, பானுக ராஜபக்ஷ, தனஞ்ஜய டி சில்வா, அவிஷ்க பெர்னாண்டோ, பதும் நிசாங்க, சாமிக கருணாரத்ன, இசுறு உதான, லக்ஷன் சன்டகன், துஷ்மந்த சமீர, ஹசரங்க.


Add new comment

Or log in with...