மசாலா பதப்படுத்தும் மாதிரி தொழிற்சாலை மூலம் கிராமத்திற்கு வலு சேர்த்துள்ள சணச

மசாலா பதப்படுத்தும் மாதிரி தொழிற்சாலை மூலம் கிராமத்திற்கு வலு சேர்த்துள்ள சணச-SEFEC-Model Spice Unit-1st Set

சணச தொழில்முனைவோர் நிதி நிபுணத்துவ மையம் (SEFEC) தொடர்ந்தும் கிராமபுற சமூகத்திற்கு பக்கபலமாகவோர் மாதிரி மசாலா பதப்படுத்தும் தொழிற்சாலையை குருநாகலை ரிதீகமயில் அமைத்துள்ளது.

இத்தொழிற்சாலையின் தொடக்க விழாவில் வடமேற்கு மாகாண ஆளுநர் ராஜா கொல்லூரே, வடமேற்கு மாகாண சபையின் முன்னாள் தலைவர் ஆர்.டி.விமலதாச, வடமேற்கு மாகாண மாகாண கூட்டுறவு ஆணையர் கே.எம்.எச்.எஸ்.கே. ஜயலத், மற்றும் ஏற்றுமதி வேளாண்மைத் துறை இயக்குநர் ஜெனரல் டாக்டர்.ஏ.பி. ஹிண்கெண்ட, மற்றும் சணச அறக்கட்டளை நிறுவனத்தின் தலைவர் போல்கஹவெல திரு பி.ஆர். அபேவிக்ரம பண்டாரா ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.

SEFEC கிராமபுற மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் பிரதான நோக்குடன் இச் செயற்திட்டத்தை ஆரம்பித்துள்ளதோடு, இவ் ஆலை பொல்கஹவெல சணச அறக்கட்டளை நிறுவனம், சணச வலையமைப்பின் அனைத்து பிரிவுகளும் நடத்திய பகுப்பாய்வு மற்றும் ஆராய்ச்சியின் விளைவாக தேசிய மட்டத்தில் செயற்படுத்தப்பட்டதோர் திட்டமாகும். இதில் சணச உட்பட புனுP சான்றழிக்கப்பட்ட மிளவு உற்பத்தியாளர் அமைப்பு, இலங்கையின் மிளகு தொடர்பான அனைத்து நிறுவனங்கள், அரச மற்றும் உள்ளாட்சி அமைப்புகள், ஏற்றுமதி வேளாண்மை துறை, இலங்கை தர நிர்ணய நிறுவனம், ஏற்றுமதி மேம்பாட்டு வாரியம் மற்றும் ஏற்றுமதியாளர்கள் மற்றும் விவசாயிகள் கைக்கோர்த்துள்ளமை விசேடம்சமாகும்.

சிறந்த மிளகு உற்பத்தியுடைய இப்பிரதேசத்தில், சர்வதேச சந்தையினை எதிர்கொள்வதற்கான அறிவு மற்றும் தொழில்நுட்ப ஆதரவை வழங்குவதோடு, உள்நாட்டு விவசாயிகளுக்கு அதிக நன்மைகளையும் வழங்குகின்றது. சிறந்ததோர் உற்பத்தி செயன்முறையின் மூலம் உற்பத்தி தரம் அதிகரிப்பதோடு, விவசாயிகளுக்கு அதிக விலையினையும் பெற்றுத்தருகின்றது. மேலும் இந்த ஆலையில் ஓசோன் ரெட்ஃபார்ம் எனப்படும் நீரிழப்பு இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது, இது ஓசோன் தொழில்நுட்பத்தால் இயக்கப்படுகிறது மற்றும் சேமிப்பகத்தின் போது பயிர்களுடன் இணைக்கக்கூடிய அப்லோடெக் எனப்படும் அதிக நச்சு பூஞ்சை பாக்டீரியா மற்றும் பாக்டீரியாக்களை முற்றிலுமாக அகற்ற முடிவதோடு, சுமார் 6 - 7 மணித்தியாலங்களில் 1,000 பவுண்டுகள் வரை உலர வைக்கவும் முடிகின்றது.

கராம்பு, ஜாதிக்காய், மஞ்சள், இஞ்சி, பலாப்பழம் மற்றும் எலுமிச்சை போன்ற பிற மசாலாப் பொருட்களின் தரத்தை மேம்படுத்தவும் இந்த வசதி பயன்படுத்தப்படும். இந்த ஆலை ரிதீகம சணச யூனியனுக்கு சொந்தமானது, என்பதோடு, இதனை ஒகொடபொல மிளகு உற்பத்தியாளர்கள் அமைப்புக்கு 10 ஆண்டு காலத்திற்கு குத்தகைக்கு எடுத்துள்ளார்.  மேலும் சர்வதேச அளவிலான தரத்திற்கமைய எற்பத்திகள் ஏற்றுமதிக்காக தயாரிக்கப்படுவதோடு, பயிற்சிபெற்ற 21 பணியாளர்கள் பணியாற்றுவதோடு சுற்றியுள்ள 300ற்கும் மேற்பட்ட சிறுதொழில் விவசாயிகள் பயன்பெறுவார்கள் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இத்திட்ட ஆலைக்கான தொழில்துறை மேம்பாட்டு வாரியத்தின் (IDP) நல்ல உற்பத்தி நடைமுறைகளுக்கான (GMP)சான்றிதழை வழங்கியுள்ளதோடு, ஹொராணவை தளமாகக் கொண்ட மசாலா ஏற்றுமதியாளரான வெர்ஜர் நேச்சுரல்ஸ{டன் சந்தை இணைப்புகளும் நிறுவப்பட்டுள்ளன.

சணச இன்டர்நெஷனல் மற்றும் DID கனடா (டெவலப்மென்ட் இன்டர்நேஷனல் டெஸ்ஜார்டின்ஸ்) ஆகியோரால் 2017 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட சணச தொழில்முனைவோர் நிதி நிபுணத்துவ மையம் (செஃபெக்) தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு பிரிவுகளில், மைக்ரோ, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களின்  (MSME)நிலையான வளர்ச்சியை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளதோடு அனைத்து பிரிவுகளிலும் சிறந்ததோர் செயற்திறனுக்கு பக்கபலமாக இருப்பதோடு இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கும் பங்காற்றி வருகின்றது. 2020 ஏப்ரல் கொவிட் - 19 தாக்கத்தின் பின்னர், பாதிக்கப்பட்ட சிறிய மற்றும் நடுத்தர வியாபாரங்களுக்கும் உதவிடும் நோக்குடன் ஓர் அவசர திட்டம் உருவாக்கப்பட்டதோடு, 6 மாத காலத்தினுள் கனடா வழங்கிய 77.7 மில்லியன் ரூபா சிறுதொழில், விவசாயிகள் மற்றும் கிராமப்புற பெண்கள், தொழில்முனைவோருக்கான பயிர் பல்வகைப்படுத்தல் நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்காக பயன்படுத்தப்பட்டது. மேலும் சுற்றுலா துறையினை மீளமைப்பதற்கும் பயன்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்தொன்றாகும்.


Add new comment

Or log in with...