பிரதமரை நாளை சந்திக்கிறது TNA

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் தொடர்பாக நாளை 4ஆம் திகதி பிரதமர் மஹிந்தராஜபக்சவுடன் த.தே.கூட்டமைப்பினர் சந்திப்பிலீடுபடவுள்ளனர்.

அதற்கு முன்னோடியாக த.தே.கூட்டமைப்பு யாழ்.பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ. சுமந்திரன் (30) வெள்ளிக்கிழமை கல்முனைக்கு விஜயம் செய்தபோது கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் பிரதேசசெயலாளர் ரி.ஜே. அதிசயராஜையும் சந்தித்தார்.

மேற்படி சந்திப்பில் த.தே.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான த.கலையரசன், இரா.சாணக்கியன் , கோ.கருணாகரம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன் , சீ.யோகேஸ்வரன், காரைதீவு தவிசாளர் கி.ஜெயசிறில், கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் மாணவர் மீட்புபேரவைத்தலைவர் செ.கணேஸ் , பிரமுகர் செ.புவிராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.

அங்கு கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. அண்மையில் அறிவிக்கப்பட்ட தரங்குறைப்பு பற்றியும் ஆராயப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

(காரைதீவு குறூப் நிருபர்)


Add new comment

Or log in with...