இந்திய உயர்ஸ்தானிகர் இராணுவ வைத்தியசாலையில் கொரோனா தடுப்பூசி பெற்றார்

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே கொழும்பு நாராஹேன்பிட்டிய இராணுவ வைத்தியசாலையில் கொவிட் – 19 தடுப்புக்கான தடுப்பூசியை (01) பெற்றுக்கொண்டார்.

ஜனாதிபதி ஆலோசகர் லலித் வீரதுங்க மற்றும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் 19 பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்திய உயர்ஸ்தானிகர், பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் விகாஸ் சூட் ஆகியோருடன் இணைந்து இராணுவ வைத்தியசாலையில் தடுப்பூசி ஏற்றும் செயற்திட்டத்தை மேற்பார்வை செய்ததுடன் இராணுவ வைத்திய குழுவினருடன் தனது எண்ணங்களை பகிர்ந்து கொண்டதன் பின்னர் ஜனாதிபதி ஆலோசகர் லலித் வீரதுங்கவுடன் இணைந்து தனக்கான தடுப்பூசியையும் ஏற்றிக் கொண்டார்.

ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு தடுப்பூசிகளை விரைவாக வழங்கியதையிட்டு இந்தியாவின் தாராள மனப்பான்மைக்கு ஜெனரல் சவேந்திர சில்வா பாராட்டுகளை தெரிவித்துடன் இரு நாடுகளுக்குமிடையில் நிலவும் நல்லெண்ணம் மற்றும் அயல் நாட்டு உறவின் உச்சத்தை வெளிக்காட்டுவதாகவும் குறிப்பிட்டார். முன்வரிசை பாதுகாப்பு ஊழியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களுக்கு சரியான நேரத்தில் தடுப்பூசி ஏற்றுவதற்காக வழி செய்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.


Add new comment

Or log in with...