இங்கிலாந்து 339/9 ஓட்டங்கள் இலங்கையை விட 42 ஓட்டங்கள் பின்னிலை

இலங்கை அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் தலைவர் ஜோ ரூட்டின் அபார ஆட்டத்துடன் இங்கிலாந்து அணி மூன்றாவது நாள் ஆட்ட நோ முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 339 ஓட்டங்களை பெற்று இலங்கை அணியை விட 42 ஓட்டங்கள் பின்தங்கியுள்ளது. காலி சர்வதேச மைதானத்தில் இடம்பெறும் இரண்டாவது போட்டியில் முதல் இன்னிங்ஸிற்காக ஆடிய இலங்கை அணி சகல விக்கெட்டையும் இழந்து 381 ஓட்டங்களை பெற்றது. இங்கிலாந்து அணி சார்பாக அவ்வணியின் தலைவர் ஜோ ரூட் 186 ஓட்டங்ளை பெற்ற போது ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். இவர் கடந்த போட்டியில் இரட்டை சதம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.அவ்வணி சார்பாக விக்கெட் காப்பாளர் ஜோஸ் பட்லர் 55 ஓட்டங்களையும் டொம் பொஸ் 32 ஓட்டங்களையும் ஏனைய வீரர்கள் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினர். இலங்கை அணி சார்பாக பந்து வீச்சில் லசித் எம்புல்தெனிய 132 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டையும் ரமேஷ் மென்டிஸ் ஒரு விக்கெட்டையும் பதம் பார்த்தனர்.

இங்கிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 98 ஓட்டங்களை பெற்றிருந்தது.

தனது கன்னி டெஸ்ட் போட்டியில் முதல் விக்கெட்டை ரமேஷ் மென்டிஸ் பெற்றுக் கொண்டார். அவர் விக்கெட் காப்பாளர் ஜோஸ் பட்லரை வீழ்த்தியே பெற்றார்.

இங்கிலாந்து அணியின் தலைவர் தனது 19 டெஸ்ட் சதத்தை பெற்றுக் கொண்டார். 2012 ம் ஆண்டு இந்திய அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார்.

இலங்கை அணி சார்பாக காலி மைதானத்தில் தனது முதல் சதத்தை பெற்ற அஞ்சலோ மெத்திவ்ஸ் அவர் 110 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.அவர் 2015 ம் ஆண்டுக்கு பின்னர் சதம் பெற்றமை குறிப்பிடத்தக்கது. இது அவரின் 11 சதமாகும். இலங்கை அணியின் விக்கெட் காப்பாளர் நிரோஷன் திக்வெல்ல 92 ஓட்டங்களையும் டில்ருவன் பெரேரா 67 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர். தனது 7 ஆவது அரைச்சதத்தை பூர்த்தி செய்தார் பெரேரா அவர் இந்த போட்டியில் விளையாடும் சிரேஸ்ட வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு வயது 38 ஆகும். அத்துடன் இங்கிலாந்து அணி சார்பாக ஜேம்ஸ் அண்டர்சன் வயது கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது பெரேராவை விட 8 நாட்கள் குறைந்தவர்.

இன்று போட்டியின் 4 ஆவது நாளாகும்.


Add new comment

Or log in with...