இலங்கையை அனைத்து துறைகளிலும் முன்னேற்றும் பாரிய எழுச்சி

- முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ

'கிராமத்துடன் கலந்துரையாடல் ஊடாக வேலைத்திட்டத்துடன் மீண்டும் கிராமத்திற்கு' தேசிய வேலைத்திட்டத்தின் சப்ரகமுவ மாகாண குழு கூட்டம் நேற்று முன்தினம் (19) பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்‌ஷ தலைமையில் சப்ரகமுவ மாகாண கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இதன்போது சப்ரகமுவ மாகாணத்தின் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. இதில் கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ,

இலங்கையை அனைத்து துறைகளிலும் முன்னேற்றும் பாரிய எழுச்சிக்கு 'கிராமத்துடன் கலந்துரையாடல் ஊடாக வேலைத்திட்டத்துடன் மீண்டும் கிராமத்திற்கு' செயற்றிட்டத்துடன் அதிகபட்ச அர்ப்பணிப்புடன் ஒன்றிணையுமாறு தெரிவித்தார்.

அனைத்து துறைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 2021 வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஏதேனும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டால் அது குறித்து பரிசீலிக்கப்படும்.

இந்த வரவு செலவு திட்டத்தில் முன்பள்ளிகளின் கல்வி வளர்ச்சி மற்றும் கல்வி வளர்ச்சிக்கு பெரும் தொகையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தொழிநுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் எதிர்ப்பார்ப்பதாகவும், முழு நாடும் உள்ளடங்கும் வகையில் இணைய தொடர்பாடல் வசதியை பெற்றுக் கொடுப்பதற்கும் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். இதன்போது முன்னால் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ அவர்களுக்கு சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தார்.

காவத்தை தினகரன் விசேட நிருபர்
 


Add new comment

Or log in with...