முதலாம் வகுப்புகளை எதிர்வரும் ஜனவரி முதல் ஆரம்பிக்க எதிர்பார்ப்பு

- அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ்

கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள 5100 பாடசாலைகளில் முதலாம் வகுப்புக்களை எதிர்வரும் ஜனவரி முதல் நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் தெரிவித்தார். மேற்படி பாடசாலைகளில் மாணவர்களின் வருகை 51 வீதமாக அதிகரித்துள்ள நிலையில் நாடளாவிய அனைத்து பாடசாலைகளிலும் 1 முதல் 5 வரையிலான வகுப்புகள் மற்றும் முன்பள்ளிகளையும் விரைவில் ஆரம்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். கல்வி அமைச்சில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர்; பெற்றுக் கொண்டு பாடசாலை செல்கின்றனர். கிரமமான முறையில் மாணவர்களின் வருகை அதிகரிக்கிறது.

இன்று வரை நாடு முழுவதிலும் 5,100 பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் 51 சதவீதமாக மாணவர்கள் வருகை உள்ளது.

சில பிரதேசங்களில் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

நிவித்திகல, கலென்பிந்துனுவெவ, பஸ்ஸர, தெஹியத்தகண்டிய, மூதூர் போன்ற பகுதிகளில் மாணவர்களின் எண்ணிக்கை வீதம் அதிகரித்துள்ளது. அதேவேளை ஆசிரியர்களின் வருகையும் 70 சதவீதமாக காணப்படுகிறது. இதனை அரசியல் ரீதியாக பார்க்க முடியாது. ஏனென்றால் மாணவர்களின் எதிர்காலம் முக்கியமானது என்பதால் இதற்கு அனைவரதும் ஒத்துழைப்பு மிக அவசியம்.

இதுவரை 6ஆம் ஆண்டு முதல் 11ஆம் ஆண்டு வரையிலான மாணவர்களே அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய வகுப்புகளையும் ஆரம்பிக்க கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

ஆரம்ப பாடசாலைகளையும் ஆரம்பிக்க உத்தேசித்துள்ளோம்.

எதிர்வரும் வியாழக்கிழமை சுகாதார அமைச்சின் சிரேஸ்ட அதிகாரிகளுடன் முன்பள்ளிகளை ஆரம்பிப்பது குறித்து பேச்சு நடத்தவுள்ளோம்.

இந்த மாத இறுதிக்குள் முன்பள்ளிகளை ஆரம்பிப்பது தொடர்பில் திகதியை அறிவிக்கவும் எதிர்பார்க்கின்றோம்.

முன்பள்ளிகள் மட்டுமல்ல. பாலர் பாடசாலை வகுப்புகளும் 1 முதல் 5 வரை வகுப்புகளை ஆரம்பிப்பது குறித்த அறிவிப்பையும் எதிர்வரும் வாரத்தில் வெளியிடவுள்ளோம்.

திறக்கப்பட்டுள்ள 5100 பாடசாலைகளில் முதலாம் வகுப்புகளை ஜனவரியில் ஆரம்பிக்க எதிர்பார்க்கின்றோம்.

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை மார்ச் மாதத்தில் நடத்தப்படுவதால் 5100 பரீட்சை நிலையங்கள் அவசியமாகும்.

அனைத்து சுகாதார வழிமுறைகளையும் ஏற்பாடு செய்துவருகிறோம்.

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...