கீரை சூப் செய்வது எப்படி

தேவையான பொருட்கள்

  1. பொடியாக நறுக்கிய முளைக்கீரை - 4 தேக்கரண்டி
  2. பொடியாக நறுக்கிய சிறுகீரை - 4 தேக்கரண்டி
  3. பொடியாக நறுக்கிய பசலைக்கீரை - 4 தேக்கரண்டி
  4. பொடியாக நறுக்கிய முருங்கைக்கீரை  - சிறிதளவு
  5. சோள மாவு - 2 தேக்கரண்டி
  6. மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
  7. நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு
  8. பட்டர் 1 தேக்கரண்டி
  9. நெய் -1 தேக்கரண்டி
  10. உப்பு - தேவையான அளவு

செய்முறை

  • சோள மாவை 250 மில்லி தண்ணீர் விட்டுக் கரைத்து கொள்ளவும்.
  • முளைக்கீரை, சிறுகீரை, பசலைக்கீரை, முருங்கைக்கீரையை நெய் விட்டு வதக்கிக் கொள்ளவும்.
  • கீரை நன்கு வதங்கியதும் அதில் மிளகுத்தூள், உப்பு, நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.
  • பின்னர் அதில் கரைத்து வைத்த சோள மாவை ஊற்றி கொதிக்கவிட்டு, பட்டரை சேர்த்து இறக்கவும். சத்தான மல்டி கீரை சூப் ரெடி.

Add new comment

Or log in with...