வறுமையை ஒழித்துக்கட்டிய சீனாவின் யுனான் மாகாணம்

கடந்த வருட இறுதியில் சீனாவில் எஞ்சியிருந்திருக்கக் கூடிய வறியவர்கள் சனத்தொகையில் மிகப் பெரிய பங்கினர் வாழ்ந்த தென்மேற்கு சீனாவின் யுனான் மாகாணம் முற்றுமுழுதான வறுமையை இப்போது ஒழித்திருக்கிறது.

மாகாணத்தின் கடைசி 9 மாகாணங்களும் வறுமையால் பாதிக்கப்பட்ட மாகாணங்களின் பட்டியலில் இருந்து நவம்பர் 14 சனிக்கிழமை நீக்கப்பட்டன. அதாவது அந்த மாகாணத்தில் வறுமையால் பாதிக்கப்பட்டிருந்த சகல 88 மாவட்டங்களும் வறுமையை உதறித்தள்ளி விட்டன என்று மாகாண வறுமை ஒழிப்பு அலுவலகத்தின் பணிப்பாளர் ஹுவாங் யுன்போ கூறினார். மாகாணத்தில் ஒப்பீட்டளவில் சிறிய சனத்தொகையைக் கொண்ட 11 இனத்துவ சிறுபான்மைக் குழுக்களும் வறுமைக்கு பிரியாவிடை கொடுத்து விட்டன என்பதும் இதன் அர்த்தமாகும்.

யுனானின் வடகிழக்கு மாவட்டமான ஷென்சியோங்கில் வறுமையால் பெரிதும் பாதிக்கப்பட்ட யாங்டொங் ஜியாவோ கிராமத்துக்கு வந்து சேர்ந்த ஒரு வார காலத்திற்குள்ளாகவே 29 வயதான முதலாவது செயலாளர் குவோ டொங்ஹுய், அங்கு வாழ்ந்த 1224 குடும்பங்கள் சம்பந்தப்பட்ட அடிப்படைத் தகவல்களை அறிந்து நினைவில் வைத்துக் கொள்ளக் கூடியதாக இருந்தது.ஷென்சியோங் ஒரு காலத்தில் சீனாவின் வறியவர்களின் மிகப் பெரிய சனத்தொகையை கொண்டிருந்த மாவட்டமாகும்.ஷாவோரொங் நகரில் முன்னர் அரசாங்க அலுவலராக பணிபுரிந்த குவோ நாட்டின் மிகவும் வறிய -- பின்தங்கிய பகுதிகளில் பணியாற்றுவதற்காக மூன்று வருடங்களுக்கு முன்னர் வறுமை நிவாரண தொண்டராக மாறினார்.

வறுமை நிவாரண தொண்டர்களாக பணியாற்றும் ஆண் தொண்டர்கள் குழுவினருடன் கூடைப்பந்தாட்டம் விளையாடுவதைத் தவிர, குவோவிற்கு ஒரு சில பொழுதுபோக்கு தெரிவுகளே இருந்தன.காதலன் ஒருவரை தேடிக் கண்டுபிடிப்பதற்கு அவருக்கு நேரம் எங்கே இருக்கப் போகிறது? நிச்சயமாக இல்லை.

"நான் என்னை அதிர்ஷ்டக்காரியாகவே உணர்கிறேன். முற்றுமுழுதான வறுமைக்கு எதிரான சீனாவின் போரில் பங்கேற்பதை பெருமையாக கருதுகிறேன் " என்று குவோ கூறினார்.

வறுமை ஒழிப்புக் கொள்கைகளை பிரசாரப்படுத்தி மேம்படுத்துதல், உள்ளூர்வாசிகளின் தொழில்வாய்ப்புகளை மேம்படுத்தி மூங்கில் தொழில்துறையை அபிவிருத்தி செய்ய உதவுதல் உட்படபெருவாரியான முயற்சிகளை யான்டொங் ஜியாவோ கிராமத்தில் வறுமை நிவாரணத் தொண்டர்கள் முன்னெடுத்தார்கள்.

"10 ஆயிரத்துக்கும் அதிகமான வறுமை ஒழிப்புத் தொண்டர்களும் 5 இலட்சத்துக்கும் அதிகமான வறிய குடியிருப்பாளர்களும் சேர்ந்து முன்னெடுத்த ஒருங்கிணைந்த முயற்சிகளின் ஊடாக ஷென்சியோங் மாவட்டத்தில் வறுமை ஒழித்துக் கட்டப்பட்டது. இது ஒன்றும் குறுக்கு வழியில்லை" என்று உள்ளூர் வறுமை நிவாரண தொண்டரான ஷெங் ஷிடொங் கூறினார்.

யுனான் மாகாணம் 2005 ஆம் ஆண்டில் இருந்து 48,500 முதல் செயலாளர்களையும் அரசாங்க அதிகாரிகள், ெடாக்டர்கள், அனுபவமிக்க முகாமைத்துவ ஆளணியினர் உட்பட வறிய கிராமங்களில் தங்கியிருந்து பணியாற்றுவதற்கான 194,700 ஏனைய தொண்டர்களையும் வறுமை நிவாரணப் பணிகளுக்கு உதவுவதற்கு நியமித்திருக்கிறது.

தற்போதைய வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்ற சகல கிராமவாசிகளையும் 2020 அளவில் வறுமையில் இருந்து விடுவிப்பதற்கு யுனான் மாகாணம் கடுமையான முயற்சிகளையும் தியாகங்களையும் கூட செய்திருக்கிறது. மாகாணத்தில் பெரும் குறைபாடுகளைக் கொண்ட போக்குவரத்து மற்றும் ஊறு விளைவிக்கக் கூடிய சுற்றுச்சூழல் ஆகியவை காரணமாக 170 க்கும் அதிகமான வறுமை நிவாரணத் தொண்டர்கள் 2005 முதல் வேலை செய்து கொண்டிருந்த வேளையில் அல்லது வாகனத்தை செலுத்திக் கொண்டிருந்த வேளையில் தங்கள் உயிர்களை தியாகம் செய்திருக்கிறார்கள்.

கடந்த ஐந்து வருட காலத்தில், வாழ்வதற்கு உகந்ததல்லாத பகுதிகளில் இருந்து உறுதியான புதிய குடியிருப்புகளுக்கு சுமார் 15 இலட்சம் மக்களை யுனான் மமாகாணம் நகர்த்தியிருக்கிறது.

புதிதாக மக்கள் குடியமர்த்தப்பட்ட பகுதிகளில் கல்வி, மருத்துவ பராமரிப்பு போன்ற பொதுச்சேவை வசதிகள் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. 95 புதிய பாலர் பாடசாலகளும் 60க்கும் அதிகமான இடைநிலை மற்றும் ஆரம்பப்பாடசாலைகளும் அமைக்கப்பட்டன என்று யுனான் அபிவிருத்தி மற்றும் சீர்திருத்தங்கள் ஆணைக்குழுவின் பிரதி பணிப்பாளரான லியாங் சுடொங் தெரிவித்தார்.

நுஜியாங்கின் ருவோயிங் என்ற கிராமத்தில் மொத்தம் 167 குடும்பங்களில் 125 குடும்பங்கள் முன்னர் வறுமையில் வாழ்ந்தன. வெளியுலகை அந்தக் கிராமத்துடன் இணைப்பது செங்குத்துச் சரிவான ஒடுகலான பாதை ஒன்று மாத்திரமே. நுஜியாங் லிசோ சுயாட்சி நிருவாகப்பிரிவு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மீள்குடியேற்றத் திட்டத்தை முன்னெடுத்து சுமார் ஒரு இலட்சம் மக்களை கடந்த 5 வருட காலத்தில் வாழ்வதற்குகந்த வசதியான பகுதிகளுக்கு நகர்த்தியது.

இவ்வருட ஆரம்பத்தில் இருந்து 88 மாவட்டங்களில் வறுமை ஒழிப்புக்கு ஆதரவளிக்கும் கைத்தொழில் துறைகளுக்கு 1850 கோடி யுவான்கள் (280 கோடி டொலர்கள்) உட்செலுத்தப்பட்டது.வறுமையினால் பாதிக்கப்பட்டிருந்த 8502 கிராமங்களிலும் மின்சார விநியோக வசதியும் தரமான வீதிகளும் அமைக்கப்பட்டிருக்கின்ன.தொலைத்தொடர்பு கட்டமைப்பு வசதிகளும் கிடைக்கப் பெறுகின்றன.

பொருளாதார ரீதியில் சறுசுறுப்பாக இயங்குகின்ற சீனப் பிராந்தியங்களின் ஆதரவு இருந்திருக்காவிட்டால், இந்த வறுமை ஒழிப்புச் சாதனையை நிறைவு செய்திருக்க முடியாது. கூட்டுச் செயற்பாட்டு கொள்கையின் கீழ் சங்காயும் தென்சீனாவின் குவாங்டொங் மாகாணமும் 2016 ஆம் ஆண்டில் இருந்து யுனானின் 372,000 மக்களை வறுமையில் இருந்து விடுவிப்பதற்கான நிதியுதவியாக 1350 கோடி யுவான்களுக்கும் அதிகமான யுவான்களுக்கும் அதிகமான பணத்தை முதலீடு செய்தன.

குவாங்டொங்கில் டொங்குவான் நகரில் இருந்து யுனானின் ஷென்சியோங் மாவட்டத்துக்கு அனுப்பப்பட்ட அதன் பிரதி தலைவரான ஷாங் வீய்ஹுவா கொவிட் --19 தொற்றுநோயின் விவைான பாதிப்புக்கு மத்தியிலும் ஷென் சியோங்கிற்கான நிதியுதவியாக டொங்குவான் 13 கோடி யுவான்களை ஒதக்கீடு செயதது.இது கடந்த வருடத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டதை விடவும் 19 கோடி யுவான்கள் அதிகமானதாகும் என்று குறிப்பிட்டார்.

குன்மிங், ( சின்ஹுவா)


Add new comment

Or log in with...