ரியாஜ் விடுதலை; CID அதிகாரிகள் இருவருக்கு இன்று அழைப்பாணை | தினகரன்

ரியாஜ் விடுதலை; CID அதிகாரிகள் இருவருக்கு இன்று அழைப்பாணை

சட்ட மாஅதிபர் முன் ஆஜராகுமாறு பணிப்பு

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பிரதி பொலிஸ் மாஅதிபர் மற்றும் பிரதான விசாரணை அதிகாரிக்கு சட்ட மாஅதிபர் அழைப்பாணை விடுத்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீன் விடுதலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காகவே இவ்வாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

விசாரணை அறிக்கைகளுடன் இன்று ஆஜராகுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பாளர் அரச சட்டத்தரணி நிஷார் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.


Add new comment

Or log in with...