நைஜீரியாவில் எரிபொருள் லொறி மோதி வெடித்ததில் 30 பேர் பலி

மத்திய நைஜீரியாவில் எரிபொருள் ஏற்றிவந்த லொறி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ஏனைய வாகனங்களில் மோதி ஏற்பட்ட வெடிப்பில் 30 பேர் வரை பலியாகியுள்ளனர்.

இதில் ஆரம்பப் பாடசலை மாணவன் உட்பட மாணவர்களும் உயிரிழந்தவர்களில் உள்ளனர்.

லொகஜா பிரதான நெடுஞ்சாலை ஒன்றில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட இந்த விபத்தின்போது எரிபொருளை ஏற்றிவந்த லொறியின் பிரேக்குகள் செயலிழந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்திருப்பதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். நைஜீரிய வீதிகளில் இவ்வாறான விபத்துகள் வழக்கமாகி உள்ளதாக அங்கிருக்கும் செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பெரும்பாலான உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு கருகியிருப்பதாக லொகஜா பொலிஸ் பேச்சாளர் வில்லி ஆயா தெரிவித்துள்ளார். இதன்போது பாடசாலை செல்வதற்கு வீதியை கடந்து கொண்டிருந்த மாணவர்களே வெடிப்பில் சிக்கியுள்ளனர்.

அங்கு கார் வண்டிகளில் இருந்தவர்களும் கொல்லப்பட்டிருப்பதாக குடியிருப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

விபத்து இடம்பெற்ற பகுதியில் இருந்து தீயுடன் கரும்புகை வெளிவரும் கட்சிகள் கொண்ட படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளன.


Add new comment

Or log in with...