கொவிட்-19 தடுப்பு மருந்து: ஏற்கனவே பாதியை வாங்கிய உலகின் செல்வந்த நாடுகள்

செல்வந்த நாடுகள் எதிர்காலத்தில் வரப்போகும் கொவிட்–19 தடுப்பு மருந்துகளில் பாதியை ஏற்கனவே வாங்கிவிட்டதாக ஒக்ஸ்பாம் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த செல்வந்த நாடுகளின் மொத்த மக்கள்தொகை உலக மக்கள் தொகையில் 13 வீதம் மாத்திரமாகும்.

மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களும் முன்னிலையில் உள்ள 5 தடுப்பு மருந்துத் தயாரிப்பாளர்களும் செய்துகொண்ட ஒப்பந்தங்களை அரச சார்பற்ற அமைப்பான ஒக்ஸ்பாம் ஆராய்ந்துள்ளது. அந்த 5 தடுப்பு மருந்துத் தயாரிப்பாளர்களின் மொத்த உற்பத்தித் திறன் 5.9 பில்லியன் மருந்து அளவு என ஒக்ஸ்பாம் கணக்கிட்டுள்ளது.

ஒருவருக்கு 2 மருந்து அளவு தேவைப்படும் என்றால், அது 3 பில்லியன் மக்களுக்குப் போதுமானது. ஏற்கனவே 5.3 பில்லியன் மருந்து அளவுக்கு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுவிட்டன.

மொடர்னா மருந்து நிறுவனம் 2.5 பில்லியன் டொலர் பொதுப் பணத்தைப் பெற்றுக்கொண்டு தனது மருந்துகள் அனைத்தையும் செல்வந்த நாடுகளுக்கு விற்றுவிட்டதாக ஒக்ஸ்பாம் சுட்டிக்காட்டியது.

பாதுகாப்பான, பயனுள்ள தடுப்பு மருந்தைத் தயாரிப்பது எவ்வளவு முக்கியமோ அந்தத் தடுப்பு மருந்தை அனைவருக்கும் கிடைக்கச் செய்வதும் அது மலிவாக இருப்பதும் அதே அளவு முக்கியம் என்று ஒக்ஸ்பாம் குறிப்பிட்டது.

கொவிட்–19 நோய்த்தொற்று எல்லா இடங்களிலும் இருப்பதை அது சுட்டிக்காட்டியது. தடுப்பு மருந்து அனைவருக்கும் இலவசமாகவும் தேவைக்கேற்ப நியாயமாக வழங்கப்பட வேண்டும் என்று அது வலியுறுத்தியது.


Add new comment

Or log in with...