கடனட்டைகளின் வட்டி வீதங்கள் குறைப்புடன் தொடரும் சலுகைகள்

கடனட்டைகளின் வட்டி வீதங்கள் குறைப்புடன் தொடரும் சலுகைகள்-CBSL-Monetary Poikce Review-August-Interest Rates on Credit Cards

இலங்கை மத்திய வங்கி அதன் தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கை நிலையினைத் தொடர்வதாக அறிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை, 2020 ஓகஸ்ட் 19ஆம் திகதியன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில், மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன் வழங்கல் வசதி வீதத்தினையும் அதன் தற்போதைய மட்டங்களான முறையே 4.50 சதவீதம் மற்றும் 5.50 சதவீதங்களில் பேணுவதென தீர்மானித்துள்ளது.

அதற்கமைய
கொள்கை வீதங்கள், நியதி ஒதுக்கு வீதங்களில் மாற்றமில்லை
துணைநில் வைப்பு வசதி வீதம்   4.50%
துணைநில் கடன் வழங்கல் வசதி வீதம்  5.50%
வங்கி வீதம்    8.50%
நியதி ஒதுக்கு விகிதம்   2.00%

ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட வட்டி வீதங்கள் குறைப்பு
கடன் அட்டைகள் மீதான உயர்ந்தபட்ச வட்டி வீதங்கள்     18.00%
முன்கூட்டியே ஒழுங்குசெய்யப்பட்ட தற்காலிக மேலதிகப்
பற்றுக்கள் மீதான உயர்ந்தபட்ச வட்டி வீதம்  16.00%
அடகு பிடித்தல் வசதிகள் மீதான உயர்ந்தபட்ச வட்டி வீதம் 10.00%
கிரமமான வட்டி வீதங்களுக்கு மேலான தண்ட வட்டி வீதம்     2.00 சதவீதப் புள்ளிகள்

இது தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள ஊடக வெளியிடு வருமாறு

PDF File: 

Add new comment

Or log in with...