ரிஷாட்டுக்கு எதிரான விசாரணை நிறைவு

2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காக தனது, ஆதரவாளர்களை புத்தளத்திலிருந்து மன்னாருக்கு அழைத்து செல்ல அரச நிதியை பயன்படுத்தியது தொடர்பான முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான விசாரணைகளை சி.ஐ.டி.யினர் நிறைவுசெய்துள்ளனர்.  

விசாரணையின் மூலம் வெளிப்படுத்தப்பட்ட விடயங்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக சட்ட மாஅதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். 

ரிஷாத் பதியுதீன் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 22 பஸ்களை பயன்படுத்தி, ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க புத்தளத்திலிருந்த வாக்காளர்களை மன்னாருக்கு அழைத்துச் சென்றமை சி.ஐ.டி.யின் விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...