22 ஆவது கொரோனா நோயாளி; 73 வயது நபர் கராபிட்டி வைத்தியசாலையில்

22 ஆவது கொரோனா நோயாளி; 73 வயது நபர் கராபிட்டி வைத்தியசாலையில்-A 73-year-old patient at the Karapitiya Hospital tested positive for Coronavirus; total Coronavirus infected cases 22

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 73 வயதான நபரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

குறித்த நபர் கராபிட்டி வைத்தியசாலையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார்.

அதற்கமைய 22 பேர் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றியதாக இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

16.03.2020
22. கராபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 73 வயது ஆண்
21. 37 வயது ஆண்
20. 50 வயது ஆண்
19. 13 வயது சிறுமி

15.03.2020
18. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: ஆண்
17. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: ஆண்
16. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: ஆண்
15. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: ஆண்
14. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: ஆண்
13. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: ஆண்
12. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: ஆண்
11. ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட ஜேர்மனி பயணத்தில் இணைந்து பயணித்தவர்: 45 வயது ஆண்

14.03.2020
10. கொரோனா தொற்றுக்குள்ளானவரின் உறவினர்: 17 வயது சிறுமி
9. இத்தாலியிலிருந்து வந்த பெண்; 56 வயதான பெண்
8. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: 42 வயது ஆண்
7. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: 43 வயது ஆண்
6. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: 44 வயது ஆண்

13.03.2020
5. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: 43 வயது ஆண்
4. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: 37 வயது ஆண்
3. ஜேர்மனியிலிருந்து நாடு திரும்பியவர் : 41 வயது ஆண்

12.03.2020
2. சுற்றுலா வழிகாட்டியுடன் தங்கியிருந்தவர் : 44 வயது ஆண்

11.03.2020
1. இத்தாலி சுற்றுலா பயணிகளின் சுற்றுலா வழிகாட்டி: 52 வயதான ஆண்
(இது தவிர கடந்த 27.01.2020 அன்று அடையாளம் காணப்பட்ட சீன பெண் ஒருவர்)


Add new comment

Or log in with...