பள்ளிவாசல்களில் மறுஅறிவித்தல் வரை தொழுகைகள் நிறுத்தம்

மறுஅறிவித்தல் வரை ஐவேளைத் தொழுகைகள் மற்றும் ஜும்ஆ தொழுகைகளை இடைநிறுத்துமாறு சகல மக்களுக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அறிவித்துள்ளது.

இது தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

பொதுச்செயலாளர் அஷ்-ஷைக் எம்.எம்.ஏ.முபாரக் நேற்று அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் மக்கள் ஒன்றுகூடும் சந்தர்ப்பங்கள் தவிர்க்கப்படல் வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனமும்,இலங்கை சுகாதார அமைச்சும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.இதற்கு அமைவாக மஸ்ஜித்களில் ஜும்ஆ, ஐவேளை, ஜமாஅத் தொழுகைகள் உட்படஏனைய எல்லா வகையான ஒன்றுகூடல்களையும் உடன்அமுலுக்கு வரும் வகையில் மறுஅறிவித்தல் வரும்வரை இடைநிறுத்துமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல்உலமா நாட்டு முஸ்லிம்களை அன்பாக வேண்டிக் கொள்கின்றது.

இத்தகைய சந்தர்ப்பங்களில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றிய அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அறிவுறுத்தல்களை கடைபிடிக்குமாறும், அதனை அமுல்படுத்துவதில் பள்ளிவாசல்களின் சம்மேளனங்கள் கண்டிப்போடு நடந்துகொள்ளுமாறும் வேண்டுகோள்விடுக்கிறது எனவும அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து முன் எச்சரிக்கையாக நடந்து கொள்ளுமாறும் உலமா சபை கோரியுள்ளது.

பொதுவாக அனைத்து நோய்களுக்குரிய நிவாரணியை அல்லாஹுத்தஆலா இறக்கி வைத்திருக்கின்றான். அல்லாஹுத்தஆலா எந்த நோயையும் அதற்குரிய நிவாரணியை அருளாமல் இறக்குவதில்லை என்று தெரிவித்துள்ள அந்த அமைப்பு,

தற்பொழுது பல நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி வருவதனால், அதனைக் கட்டுப்படுத்த ஒவ்வவொரு நாடும் தற்பாதுகாப்பு முயற்சிகளைச் செய்து வருகின்றன. அதேபோன்று எமது நாட்டிலும் இந்த நோய் பரவாமல் இருப்பதற்கு அரசாங்கம் பல வகையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இது விடயமாக அரசாங்கம் பொதுமக்களுக்கு வழங்கும் வழிகாட்டல்களை பின்பற்றி இந்த நோய் இலங்கையில் பரவாமல் இருப்பதற்கு நாம் ஒவ்வொருவரும் ஒத்துழைப்பு வழங்குதல் வேண்டும் எனவும் கோரியுள்ளது.

நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதைத்தடுப்பது சம்பந்தமாக, உலமா சபை பின்வரும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

ஜும்ஆ மற்றும் ஜவேளைத்தொழுகை உட்படஅனைத்து ஒன்றுகூடல்களையும் மஸ்ஜித் மற்றும் பொதுஇடங்களில் தவிர்ந்து கொள்ள வேண்டும்.

உரியநேரத்திற்கு ஒவ்வொரு மஸ்ஜிதிலும் அதான் சொல்ல வேண்டும். அதானின் முடிவில் “ஸல்லூ பீ ரிஹாலிகும்” (நீங்கள்இருக்கும் இடங்களில் தொழுதுகொள்ளுங்கள் என்றுஅறிவிக்க வேண்டும்.

மஸ்ஜிதில் இருக்கும்இமாம் மற்றும்முஅத்தின் போன்றவர்கள் மஸ்ஜிதிலேயே ஜமாஅத்தாகத் தொழுதுகொள்ள வேண்டும்.

வீட்டில்உள்ளவர்கள் ஐவேளைத்தொழுகைகளை உரியநேரத்தில் ஜமாஅத்தாகத் தொழ வேண்டும். முன்பின் சுன்னத்தானதொழுகைகள் மற்றும்ஏனைய தஹஜ்ஜுத், ழுஹா, சதகா, நோன்பு போன்ற நபிலானவணக்கங்களில் கூடியகவனம் செலுத்துவதோடு பாவமான காரியங்களிலிருந்து விலகிநிற்றல்.

பிள்ளைகள் விடுமுறையில் இருப்பதனால், அவர்கள் சுற்றுலா செல்லுதல், பாதையில்கூடிவிளையாடுதல் போன்ற விடயங்களைத்தவிர்த்து, குர்ஆன்ஓதுதல், துஆ, மற்றும்கற்றல், கற்பித்தல் போன்றநல்ல விடயங்களில்ஈடுபடுத்து வதில்பெற்றோர் கூடுதல்கவனம் செலுத்தல்.

ஒருவர்மற்றவரை சந்தித்தால்ஸலா கூறுவதும்முஸாபஹாசெய்வதும்சுன்னத்தாகும். எனினும், COVID19என்ற நோய்கைகள்மூலம் அதிகமாகப்பரவ வாய்ப்புள்ளது என்றுவைத்திய நிபுணர்கள் கருதுவதால், ஒருவர்மற்றவரை சந்திக்கும்பொழுது முஸாபஹாசெய்வதைத் தவிர்த்து ஸலாம்சொல்வதுடன் போதுமாக்கிக் கொள்ளுதல்.

ஜனாஸாவின் கடமைகளைமார்க்க விதிமுறைகளைப் பேணி நிறைவேற்றுவது எம்மீதுள்ள கடமையாகும். இக்கால சூழ்நிலையை கவனத்திற்கொண்டு அடக்கம்செய்யும் விடயத்தில் ஜனாஸாவிற்கு செய்யவேண்டிய முக்கியகடமைகளுடன் சுருக்கிக் கொள்ளல். சமூகவலைத்தளங்களில் மார்க்கத்திற்கு முரணானமற்றும் ஊர்ஜிதமற்ற தகவல்களைப் பரப்பு வதைத்தவிர்க்குமாறும் கோரப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...