Friday, April 26, 2024
Home » தவக்கால சிந்தனை

தவக்கால சிந்தனை

கடவுளின் கருணை நிறைந்த காலம்

by Gayan Abeykoon
March 1, 2024 9:07 am 0 comment

திரு அவையாக  தவக்காலம், ‘வசந்தகாலத்தின்’ அழைப்பாயின்,குறிப்பாக திருமுழுக்குத் தயாரிப்போருக்கான இறுதிக் கட்டத் தயாரிப்பின் காலமாக அமைவதோடு அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு புகுமுக அருளடையாளங்களாகிய திருமுழுக்கு, நற்கருணை, உறுதிப்பூசுதல் வாயிலாக  திருஅவையின் முழு உறுப்பினர்களாக  மாற்றம் பெறுகின்றனர்.

மேலும், இக் காலத்தின் இறைவார்த்தைகள் நமக்கு விடுக்கும் அழைப்பானது, நமது திருமுழுக்கின் அடையாளமாகிய கிறிஸ்துவின் சீடர்கள் என்கிற நிலையில் ஆழமாக வளரவேண்டுமென்பதாகும்.

தவக்காலப் புதுப்பித்தலின் இரண்டாம் வாரத்தின் நிறைவினை நோக்கி நகரும் போது, விவிலியத்தில் நன்கு அறியப்பட்ட, பன்னெடுங்காலமாக சொல்லப்படுகின்ற கதையாகிய யோசேப்பும் அவரது சகோதரர்களும் பற்றிய கதை நாம் அனைவரும் அறிந்ததே. தொடக்க நூல் 37ஆவது பிரிவிலும் தொடர்ந்து வருகின்ற பகுதிகளிலும் யோசேப்பின் வாழ்வில் வியக்கத்தக்க மற்றும் சூழ்ச்சியான முறையில் இறைவன் செயலாற்றிய விதமும் எகிப்தின் அதிபதியாகிய பாரவோனின் முன்னிலையில் அவரை  உயர்வடையச் செய்தமை​யையும் வாசிக்கின்றோம்.

இன்றைய நாளின் முதல் வார்த்தையில் கனவு காண்பவராகிய யோசேப்பு தந்தையின் விருப்பத்திற்குரியவராகவும் தமது சகோதரர்களின் வெறுப்புக்குரியவராகவும் சித்தரிக்கப்படுகின்றார். அதனால், குற்றமற்ற யோசேப்பு தமது சகோதரர்களால் முதலில் பாழ் கிணற்றில் போடப்பட்டு பின்னர் எகிப்திற்கு செல்கின்ற இஸ்ரவேலிய வர்த்தகர்களுக்கு விற்கப்படுகிறார்.

சந்தேகத்திற்கு இடமின்றி கிறிஸ்துவை பிரசன்னப்படுத்துகின்ற யோசேப்பு எகிப்தில் தமது சகோதரர்கள் மட்டில் பெருந்தன்மையும் தமது தந்தை மட்டில் பாசத்தையும் காண்பிக்கின்றார்.

யோசேப்பு பழிவாங்குதல் மற்றும் பழிவாங்கும் தீமைக்கெதிராக உயர்ந்துநின்று தவக்காலத்தின் இதயமாகிய கடவுளின் நம்பமுடியாத கருணை மற்றும் மன்னிக்கும் ஒப்புரவினைக் காண்பித்து அனைவருக்கும் விருப்பமானவராக மாறுகிறார்.

கடவுள் எப்போதும் நம்மை தமது உயிர்கொடுக்கும் கருணையால் நிறைத்து கிறிஸ்துவின் சீடர்களாக நாமும் அதனை அடுத்தவர்களுக்கு செய்ய அழைக்கின்றார். இதனைச் செய்யவே நம் திருத்தந்தை பிரான்சிஸ் அனைவரையும் அழைக்கின்றார். தவக்காலம் என்பது கடவுளின் கருணை வாழுமிடமாக, ஆழமாக வசிக்குமிடமாக திருஅவை திகழ அனைவரையும் அழைக்கும் காலமாகும்.

-அருட்தந்தை நவாஜி…”

(திருகோணமலை மறைமாவட்டம்)

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT