க.பொ.த. சாதாரணதர பரீட்சை டிச. 02இல் ஆரம்பம் | தினகரன்


க.பொ.த. சாதாரணதர பரீட்சை டிச. 02இல் ஆரம்பம்

2019ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் இரண்டாம் திகதி ஆரம்பமாகுமென, பரீட்சைகள் திணைக்களம் இன்று (15) அறிவித்துள்ளது.

எதிர்வரும் டிசம்பர் மாதம் 12ஆம் திகதி வரை பரீட்சை இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி. சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் அமைக்கப்பட்டுள்ள 4,987 பரீட்சை நிலையங்களில் பரீட்சை இடம்பெறவுள்ளதோடு, 717,008 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.

பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.


Add new comment

Or log in with...