கஞ்சிப்பானை இம்ரானுக்கு மொபைல் வழங்கிய தந்தை உள்ளிட்ட அறுவர் கைது | தினகரன்


கஞ்சிப்பானை இம்ரானுக்கு மொபைல் வழங்கிய தந்தை உள்ளிட்ட அறுவர் கைது

பூசா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குற்றவாளியான,‘கஞ்சிப்பானை இம்ரான்’ என அழைக்கப்படும்மொஹமட் நஜீம் மொஹமட் இம்ரானுக்கு வழங்குவதற்காக  இரண்டு மொபைல் போன்கள் மற்றும் இரண்டு சார்ஜர்களை எடுத்துச் சென்ற அவரது தந்தை மற்றும் சகோதரர் உட்பட 6 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

அவர்கள் எடுத்துச் சென்ற உணவுப் பொட்டலத்தில் சூட்சுமமாக உருவாக்கப்பட்ட பகுதிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு மொபைல் போன்களும் சார்ஜரும் மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

இன்று அனுஷ்டிக்கப்படும் கைதிகள் தின கொண்டாட்ட நாளில் கைதிகளின் குடும்பங்களுக்கு கைதிகளை சந்திக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, காஞ்சிப்பானை இம்ரானின் தந்தை உள்ளிட்டோர் அங்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தற்போது ரத்கம பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.


Add new comment

Or log in with...