ஆலயம் உடைத்து திருட்டு; பூசாரி உட்பட இருவர் கைது | தினகரன்


ஆலயம் உடைத்து திருட்டு; பூசாரி உட்பட இருவர் கைது

பொகவந்தலாவ  மேல்பிரிவு தோட்டத்தில் உள்ள ஆலயத்தினை உடைத்து அம்மன் கழுத்தில் இருந்த  தங்க மாலையை களவாடிய இரண்டு சந்தேக நபர்களை பொகவந்தலாவ பொலிஸார் நேற்றுமுன்தினம் கைது  செய்துள்ளனர்

ஆலயம்  உடைக்கப்பட்டு ஆலயத்தில் உள்ள உண்டியலில் உள்ள பணமும் களவாடப்பட்டுள்ளதாக  ஆலயத்தின் பூசாரி ஆலய நிர்வாகத்திடம் கூறியதையடுத்து ஆலய நிர்வாகத்தினர்  பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

அதற்கமைய ஆலயத்தின்  பூசாரியை அழைத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட போது பூசாரி அணிந்து இருந்த  சட்டை  பையில் மாலை அடகுவைக்கப்பட்ட ரசீது இருந்ததை பொலிஸார் அவதானித்துள்ளனர். அதற்கமைய  பூசாரியை  சந்தேகத்தின் பெயரில் பொலிஸார் கைது செய்துள்ளதுடன், உண்டியல் பணத்தை திருடிய சந்தேக  நபரையும் பொலிஸார் கைது செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து  தெரியவந்துள்ளது.

களவாடப்பட்ட தங்கமாலை 15ஆயிரம் பெறுமதியானது என பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவத்தில்  கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களையும் ஹற்றன் நீதவான்  முன்னிலையில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

நோட்டன் பிரிட்ஜ்  நிருபர்


Add new comment

Or log in with...