Home » புதிய சலுகைகளுடன் மொபிடெல் உபஹார பொதி

புதிய சலுகைகளுடன் மொபிடெல் உபஹார பொதி

- அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் வழங்கப்படும்

by Rizwan Segu Mohideen
January 23, 2024 12:28 pm 0 comment

– நாடு திரும்பிய ஜனாதிபதி விடுத்துள்ள அறிவித்தல்

மொபிடெல் நிறுவனத்தினால் அரச ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்கு வழங்கப்படும் உபஹார பொதியை, புதிய சலுகைகளுடன் மீண்டும் வழங்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவிற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அதன்படி, இதன் பயனை அனைவருக்கும் வழங்குமாறும், குறித்த சலுகை பொதியை அரசாங்க தகவல் திணைக்களத்தில் பதிவுசெய்துள்ள அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவிற்கு ஜனாதிபதி மேலும் பணிப்புரை விடுத்துள்ளார்.

Mobitel நிறுவனம் உபஹார பொதியை அறிமுகப்படுத்தி 15 வருடங்களாவதை முன்னிட்டு தற்போது புதிய உபஹார பொதியை வெளியிட்டுள்ளது…

உகாண்டாவின் கம்பாலாவில் நடைபெற்ற அணிசேரா நாடுகளின் மாநாட்டின் (NAM) 19 ஆவது அரச தலைவர்கள் மாநாடு மற்றும் G77 + China 3 ஆவது தென் தென்துருவ மாநாடு, சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற பொருளாதார உச்சி மாநாடு ஆகியவற்றில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த வியாழக்கிழமை (18) உகண்டா நோக்யி உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.

அதற்கமைய தமது வெளிநாட்டு பயணங்களை முடித்துக் கொண்டு இன்று (23) காலை ஜனாதிபதி நாடு திரும்பியுள்ளார்.

இன்று காலை 8.30 மணியளவில், துபாய் எமிரேட்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான EK650 விமானத்தில் ஜனாதிபதி மற்றும் அவருடன் பயணித்த தூதுக்குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

நவீன சர்வதேச கடன் தீர்வு மாதிரி தற்காலத்திற்கு பொருத்தமானதாக இல்லை

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT