இந்திய வீடுகளில் மோடி அலை எழுவதை தடுக்க முடியாது | தினகரன்

இந்திய வீடுகளில் மோடி அலை எழுவதை தடுக்க முடியாது

பாலியல் கொடூரத்துக்கு மரண தண்டனை விதித்த மகன் பிரதமராவதும் உறுதி

இந்தியாவின் ஒவ்வொரு வீடுகளிலிருந்தும் மோடி அலை வீசுவதாகப் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார். மத்திய பிரதேசத்தில், ரட்லம், இந்துார் லோக்சபா தொகுதிகளிலும், ஹிமாச்சலப் பிரதேசத்திலும், தேர்தல் பிரச்சாரங்களில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இக்கூட்டங்களில் உரையாற்றிய பிரதமர்,

அரசியல் மேதாவிகளும், டில்லியில் கட்டுக் கதைகளைப் பரப்புவோரும், மோடிக்கு வீசும் அலையைக் கண்டு அதிர்ந்து போயுள்ளனர்.

தாய்மார்களுக்கு என்மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது. சகோதரிகளும் இப்போது என்னில் நம்பிக்ைக வைத்துள்ளனர். பாலியல் கொடூரத்துக்கு மரண தண்டனை விதித்த இந்த மகனை (மோடி) பிரதமராக்க தணு பெண்கள் குலம் துணிந்து விட்டது. இதற்காகவே, சாரை சாரையாக வாக்குச் சாவடிகளில் பெண்கள் குவிகின்றனர். நாடு முழுவதும், ஒவ்வொரு வீட்டில் இருந்தும், மோடி அலை வெள்ளமாக பொங்கிப் பிரவாகமெடுத்துள்ளது.

சீக்கியர் கலவரத்தை, 'நடந்தது நடந்து விட்டது, என்ன செய்ய...' என, காங்கிரஸ் தலைவர், சாம் பிட்ரோடா தெரிவித்துள்ளார். போபால் விஷவாயு துயரம், 'காமன் வெல்த்' விளையாட்டு ஊழல், '2ஜி' ஊழல் என, அனைத்திலும், இதே மனப்பான்மையிலே காங்கிரஸ் உள்ளது.

காங்கிரஙின் இந்த ஆணவ பேச்சுக்கும் வீடு, மின்சாரம், சமையல் எரிவாயு சிலிண்டர், கழிப்பறை இல்லாமல் காங்கிரஸ் ஆட்சியில் அவதிப்பட்டதற்கும் பதிலடி தர மக்கள் முன்வந்துள்ளனர். நான், மக்களை கடவுளாக மதிக்கிறேன். ஆனால் மத்திய பிரதேச காங்கிரஸ் அரசு, உறுதி அளித்தபடி, விவசாய கடன்களை தள்ளுபடி செய்யாமல், மக்களாகிய கடவுளை ஏமாற்றி விட்டது.

இராணுவத்திற்கான தளபாடங்களில், 70 சதவீதம் வெளிநாடுகளிலிருந்தே கொள்வனவு செய்கிறோம்.இதை காங்கிரஸ் அரசு, ஏ.டி.எம்., போல பயன்படுத்தி வந்தது. இதன் காரணமாகவே, நம் வீரர்களுக்கு, குண்டு துளைக்காத ஜாக்கெட்கள் வாங்கும் ஒப்பந்தத்தை, ஆறு ஆண்டுகள் தாமதப்படுத்தியதாகவும் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...