Home » அம்பாறை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் சப்றாஸ் புலமைப்பரிசில் பெற்று அவுஸ்திரேலியா பயணம்

அம்பாறை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் சப்றாஸ் புலமைப்பரிசில் பெற்று அவுஸ்திரேலியா பயணம்

by mahesh
January 3, 2024 12:10 pm 0 comment

அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக சேவையாற்றிய எம்.எஸ்.எம்.சப்றாஸ் அவுஸ்ரேலியா நாட்டின் புலமைப்பரில் பெற்று பொருளாதார அபிவிருத்தி தொடர்பான மூன்று வருட உயர்கற்கை நெறிக்கு தெரிவு செய்ப்படுள்ளார்.இக்கற்கை நெறிக்கு தெரிவு செய்யப்பட்ட 22 பேரில் தமிழ் பேசும் சமூகத்தைச் சேர்ந்த ஒரேயொருவர் இவராவார்.

குருநாகல் மாவட்டத்தின் பறஹகதெனியாவில் முகம்மது சௌபான்(ஓய்வுநிலை உத்தியோகத்தர்) மற்றும் சொஹாறா உம்மா தம்பதியினரின் மகனான இவர் தனது ஆரம்பக் கல்வியினை குருநாகல் பறகஹ தெனியா தேசிய பாடசாலையிலும், தஉயர்தரக் கல்வியினை குருநாகல் சியம்பலகஸ்கொட்டுவ மதீனா தேசிய பாடசாலையின் விஞ்ஞான பிரிவிலும் கற்று 2006ஆம் ஆண்டில் விவசாய பாட கற்கை நெறிக்கு வயம்ப பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி தனது விவசாய இளமானிப் பட்டத்தை 2010 ஆம் ஆண்டில் பெற்றுக்கொண்டார். மேலும் 2016 ஆம்ஆண்டில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தனது விஞ்ஞானமுதுமாணி பட்டத்தைப் பெற்றுக் கொண்டார்.

இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் சட்டமாணி பட்டத்தையும், SLIDA இல் பொதுநிர்வாக பட்டப்பின் படிப்பு டிப்ளோமா பட்டத்தையும், சந்தைப்படுத்தல் துறை பட்டப்பின் படிப்பு டிப்ளோமா பட்டத்தை SLIM நிறுவனத்திலும் பெற்றுக் கொண்டார். இவர் அகில இலங்கை சமாதான நீதவானும் ஆவார்.

2012 ஆம் ஆண்டில் இலங்கை நிர்வாக சேவை பரீட்சைக்கு தோற்றி சித்தியடைந்து 2012 ஆம் ஆண்டிலிருந்து 2018 ஆம் ஆண்டுவரை 06 ஆண்டுகள் குருநாகல் மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக கடமையாற்றிய பின்னர் 2018 செப்டம்பர் மாதம் அம்பாறை மாவட்ட மாவட்ட சமுர்த்தி பணிப்பாராக இடமாற்றம் பெற்று இன்று வரை அம்பாரை மாவட்ட சமுர்த்திப்பணிப்பாளராக கடமையாற்றி வருகின்றார்.

இவர் கடந்த 2021 ஆம்ஆண்டு அபிவிருத்தி தொடர்பான பாடநெறிக்காக தெரிவு செய்யப்பட்டு அமெரிக்காவின் புலமைப்பரிசில் பெற்று அமெரிக்கா Cornell university இல் தனது கற்கை நெறியினை பூர்த்தி செய்துள்ளார்.

இக்கற்கை நெறி தொடர்பாக வழங்கப்படும் சான்றிதழ் அமெரிக்க ஜனாதிபதியின் கையெழுத்திட்டு வழங்கப்படுவது சிறப்பம்சமாகும்.

அதேபோன்று இதற்கொத்த பல கற்கைநெறிகளை 2019 இல் சிங்கப்பூரிலும், 2018 இல் சீனாவிலும், 2017 இல் இந்தியாவிலும் மேற்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

நிஸா இஸ்மாயீல் Dip in journalism (SEUSL)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT