வியாபாரத்தில் ஈடுபட்ட இந்திய பிரஜை கைது | தினகரன்

வியாபாரத்தில் ஈடுபட்ட இந்திய பிரஜை கைது

உள்நாட்டில் வியாபாரம் மேற்கொண்ட இந்திய சுற்றுலாப் பயணியை பொலிஸார் பொலன்னறுவை பிரதேசத்தில் வைத்து கைதுசெய்துள்ளனர். 

கைதுசெய்யப்பட்டவர் 20வயதுடைய இந்தியப் பிரஜையென பொலிஸார் ஊர்ஜிதம் செய்துள்ளனர். 

பொலன்னறுவை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்தே மேற்படி நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

சுற்றுலா வீசாவில் இலங்கை வந்திருக்கும் இந் நபர் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் மூலம் வியாபாரத்தில் ஈடுபட்ட... (03ம் பக்கத் தொடர்)

இந்நாட்டின் குடிவரவு, குடியகல்வு சட்டத்தை மீறியிருப்பதாக பொலிஸார் அவர் மீது குற்றம் சுமத்தியுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபரை பொலன்னறுவை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(லக்ஷ்மி பரசுராமன்)


Add new comment

Or log in with...