இந்தியன் 2 படத்தில் என்னை புதுமையாக பார்க்கலாம் - காஜல் அகர்வால் | தினகரன்

இந்தியன் 2 படத்தில் என்னை புதுமையாக பார்க்கலாம் - காஜல் அகர்வால்

'குயீன்' ஹிந்தி படத்தின் தமிழ் ரீமேக்கான 'பாரிஸ் பாரிஸ்' படத்தில் நடித்து முடித்துள்ள நடிகை காஜல் அகர்வால் அடுத்ததாக ஷங்கர் இயக்கத்தில் கமலுடன் 'இந்தியன் 2' படத்தில் நடிக்கவுள்ள நிலையில் இப்படத்தில் நடிக்கவுள்ள கதாபாத்திரம் குறித்து தெரியப்படுத்தியுள்ளார்.

"நான் ஒரு படத்தில் நடிக்கிறேன் என்றால் அதில் ஏதோ ஒரு விஷயம் ஆர்வத்தை ஏற்படுத்துகிற மாதிரி இருக்க வேண்டும். செய்கிற வேலை புதுமையாக இருக்க வேண்டும். கதைக்கு முக்கியத்துவம் இருக்கிறதா? என்று பார்ப்பேன். அதற்காக கதையில் நான் வலிய சென்று மூக்கை நுழைக்க மாட்டேன். எப்போதும் வித்தியாசமான கதைகள் நம்மை தேடி வராது. எனவே வருகிற கதைகளில் வித்தியாசமாக செய்யும் ஆர்வத்தில் நடிப்பேன். அந்த வகையில் தற்போது இந்தியன் 2 படத்தில் நடிக்கிறேன். அதில் என்னை புதுமையாக பார்க்கலாம்" என்று கூறியுள்ளார்.


Add new comment

Or log in with...