அடையாளம் காணப்படாத பெண்ணொருவரின் தலை மீட்பு | தினகரன்


அடையாளம் காணப்படாத பெண்ணொருவரின் தலை மீட்பு

அடையாளம் காணப்படாத பெண்ணொருவரின் தலை மீட்பு-Head Found without Body-Bandaragama Polgoda

அடையாளம் காணப்படாத பெண் ஒருவரின் தலைபகுதி  மீட்கப்பட்டுள்ளது.

இன்று (05) காலை 7.15 மணியளவில் பாணந்துறை - இரத்தினபுரி வீதியில் பண்டாரகம, பொல்கொட பாலத்திற்கு அருகில் குறித்த தலைப்பகுதி மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

குறித்த  நபரை அடையாளம் காண்பதற்கு உதவுமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேவேளை நேற்றைய தினம் (04) பிற்பகல் 5.50 மணியளவில் செவணகல, கிரிஇப்பன் குளத்தில் அடையாளம் காணப்படாத பெண்ணொருவரின் தலையற்ற உடல்  பகுதியொன்று மீட்கப்பட்டிருந்தது.

குறித்த தலை, அவ்வுடலுடன் தொடர்புற்றதா என்பது தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய குறித்த நபர் தொடர்பில் அடையாளம் காண்பதற்கு பின்வரும் தொலைபேசிகளுக்கு தொடர்பை ஏற்படுத்துமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

038 - 2290222, 038 - 2293922 - பண்டாரகமை பொலிஸ் நிலையம்
071 8591681 - பண்டாரகமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி

குறித்த படத்தின் உண்மையான தோற்றம் 
(சிறுவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள் உள்ளிட்ட மனதளவில் பாதிக்கப்படக்கூடியோர் இதனை பார்ப்பதை தவிர்க்கவும்)


Add new comment

Or log in with...