சிரிய வான் பாதுகாப்பை பலப்படுத்தும் ரஷ்யா | தினகரன்

சிரிய வான் பாதுகாப்பை பலப்படுத்தும் ரஷ்யா

இஸ்ரேல் வான் தாக்குதலின்போது சிரியப் படை தவறுதலாக ரஷ்ய இராணுவ விமானத்தை சுட்டுவீழ்த்தியதைத் தொடர்ந்து ரஷ்யா சிரியாவுக்கு புதிய விமான எதிர்ப்பு ஏவுகணைகளை அனுப்பவுள்ளது.

நிலத்தில் இருந்து வானை தாக்கும் எஸ்–300 ஏவுகணை இரண்டு வாரங்களுக்குள் சிரியாவுக்கு வழங்கப்படும் என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்கெய் ஷொய்கு குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஏவுகணைகள் 2013 ஆம் ஆண்டு சிரியாவுக்கு வழங்கப்படவிருந்தபோதும் ரஷ்யாவின் கோரிக்கையை அடுத்து அது ரத்துச் செய்யப்பட்டது. ஆனால் தற்போது நிலைமை மாறிவிட்டது என்றும் அது எமது தவறு இல்லை என்றும் ஷொய்கு குறிப்பிட்டுள்ளார்.

கடந்த செப்டெம்பர் 17 இல் சுட்டுவீழ்த்தப்பட்ட விமானத்தில் இருந்த 17 ரஷ்ய இராணுவ தரப்பினர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு இஸ்ரேல் மீது சிரியா மற்றும் ரஷ்யா குற்றம்சாட்டுகின்றன.


Add new comment

Or log in with...