எதிர்க்கட்சித் தலைவரை மாற்றும் அதிகாரம் தன்னிடம் கிடையாது என சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தங்களுக்கு வழங்க வேண்டும் என தெரிவித்து ஒன்றிணைந்த எதிரணியான, மஹிந்த ஆதரவு எம்பிக்களினால் கடந்த வாரம்சபாநாயகரிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, இன்று (10) இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் இது தொடர்பில் தனது நிலைப்பாட்டை அறிவித்த சபாநாயகர், சம்பிரதாயபூர்வாகவோ, அரசியலமைப்பு ரீதியாகவோ தனக்கு எதிர்க்கட்சித் தலைவரை நியமிக்கவோ, மாற்றவோ அதிகாரம் கிடையாது என தெரிவித்தார்.
ஆயினும் எதிர்க்கட்சியிலும் இருக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்களுக்கு, போதிய நேரத்தை வழங்க நடவடிக்கை எடுப்பதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
தற்போதைய பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் பதவி வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
(பாராளுமன்றத்திலிருந்து மகேஸ்வரன் பிரசாத்)
Add new comment