சீனாவின் பொருட்களுக்கு அமெரிக்கா மேலும் வரி | தினகரன்

சீனாவின் பொருட்களுக்கு அமெரிக்கா மேலும் வரி

சீனா மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான வர்த்தகப் போரை அதிகரிக்கும் வகையில் அமெரிக்கா மேலும் வரி விதிக்கும் அறிவிப்பை வெளியிட்டிருப்பதற்கு சீனா அதிர்ச்சி வெளியிட்டுள்ளது.

சீனாவின் 200 பில்லியன் டொலர் பெறுமதியான கூடுதல் உற்பத்திகளுக்கு இறக்குமதி வரி விதிக்கும் பட்டியலை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. இந்த வரி விதிப்பு வரும் செப்டெம்பரில் கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரு நாடுகளும் பழிக்குப் பழி நடவடிக்கையாக பரஸ்பரம் அடுத்த நாட்டின் 34 பில்லியன் டொலர் பெறுமதியான உற்பத்திகளுக்கு இறக்குமதி வரிகள் விதித்து சில நாட்களிலேயே இந்த பதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கை ஏற்க முடியாதது என்று சாடி இருக்கும் சீனா, இது உலகை பாதிப்புக்கு உள்ளாக்கும் என்று எச்சரித்துள்ளது.

“அமெரிக்காவின் நடத்தை சீனாவை பாதிக்கும், உலகை பாதிக்கு, தன்னைத் தானே பாதிக்கும்” என்று சீன வர்த்தக அமைச்சு வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்கா வெளியிட்டிருக்கு பெயர் பட்டியலில் உணவு உற்பத்திகள், கனிமங்கள், கைப்பைகள் போன்ற நுகர்வுப் பொருட்கள் உட்பட 6,000க்கும் அதிகமான பொருட்கள் உள்ளன. இந்த பொருட்களுக்கு 10 வீத இறக்குமதி வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளுக்கு பதில் நடவடிக்கை ஒன்றாகவே இந்த வரிகள் விதிக்கப்படுவதாக அமெரிக்கா குறிப்பிடுகிறது.


Add new comment

Or log in with...