சிறுமியை கடத்தி விற்பனை; லிந்துலை ந.சபை தலைவர் உள்ளிட்ட நால்வர் கைது | தினகரன்

சிறுமியை கடத்தி விற்பனை; லிந்துலை ந.சபை தலைவர் உள்ளிட்ட நால்வர் கைது

சிறுமியை கடத்தி விற்பனை; லிந்துலை ந.சபை தலைவர் உள்ளிட்ட நால்வர் கைது-Child abu

 

ஐந்து வயது சிறுமி ஒருவரை கடத்தி விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் தலவாக்கலை – லிந்துலை நகர சபையின் தலைவர் அனகிபுர அசோக சேபால மற்றும் நகரசபை உறுப்பினர் இஷார மஞ்சநாயக்க உள்ளிட்ட மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2017 ஆம் ஆண்டு போர்ட்மோர் வத்தை, அகரபத்தன பிரதேசத்தில் வசிக்கும் சிறுமி ஒருவரை கடத்தி விற்பனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பிலேயே இவர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

நேற்றையதினம் (03) குறித்த நால்வருக்கும் எதிராக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து இவர்கள், நுவரெலியா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நால்வரையும் இன்றையதினம் (04) நுவரெலியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா பொலிசார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

 


Add new comment

Or log in with...