இன வன்முறை; மரணித்தோருக்கு ரூ. 5 இலட்சம் நட்ட ஈடு | தினகரன்

இன வன்முறை; மரணித்தோருக்கு ரூ. 5 இலட்சம் நட்ட ஈடு

வைத்திய சான்றிதழுக்கமைய காயமடைந்தோருக்கு ரூ. 2 1/2 இலட்சம்

கடந்த மார்ச் மாதம் கண்டி திகன, தெல்தெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற இனமுறுகல் தொடர்பான அசம்பாவிதங்களினால் உயிரிழந்தவர்களுடைய குடும்பங்களுக்கு  நட்டஈடு வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நேற்று (10) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் சிறைச்சாலை மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீற்குடியேற்றம் மற்றும் சைவ சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய கலவரத்தினால் உயிரிழந்த மூவரின் குடும்பங்களுக்கு தலா ரூபா 500,000 காயமடைந்தவர்களுக்கு வைத்திய சான்றிதழுக்கு அமைய ஆக கூடிய தொகையாக ரூபா. 250,000 வழங்குவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 


Add new comment

Or log in with...