Friday, April 26, 2024
Home » 6 வருடங்களாக நிறுத்தப்பட்டுள்ள நிர்மாணப் பணிகள்

6 வருடங்களாக நிறுத்தப்பட்டுள்ள நிர்மாணப் பணிகள்

- தோட்ட வீடுகளை நிர்மாணித்து உடனடியாக வழங்குமாறு மக்கள் கோரிக்கை

by Prashahini
October 31, 2023 2:05 pm 0 comment

மஸ்கெலியா, பிரவுன்ஸ்விக் தேயிலைத் தோட்டத்தில் மண்சரிவினால் இடம்பெயர்ந்த தோட்டத் தொழிலாளர் சமூகத்தினருக்கு நிர்மாணிக்கப்பட்ட தோட்ட வீடுகளை உடனடியாக வழங்குமாறு பாதிக்கப்பட்ட மக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.

2017 ஆம் ஆண்டு பிரவுன்ஸ்விக் தோட்ட எமலினா பகுதியில் ஏற்பட்ட திடீர் மண்சரிவினால் வீடுகளை இழந்த 18 தோட்டத் தொழிலாளர் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தங்குவதற்காக அதே தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய தோட்ட வீட்டுத் தொகுதியின் நிர்மாணப் பணிகள் 6 வருடங்களாக நிறுத்தப்பட்டுள்ளது.

மண்சரிவில் இடம்பெயர்ந்த தோட்ட சமூகத்தினருக்கு இதுவரை வீடுகள் வழங்கப்படவில்லை என தொழிலாளர்கள் விரக்தியில் உள்ளனர்.

அப்போதைய அரசாங்கத்தின் தோட்ட வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு அமைச்சர் பழனி திகாம்பரத்தின் வேண்டுகோளுக்கு இணங்க 07 பேர்ச்சஸ் காணியுடன் கூடிய இந்த 18 தோட்ட வீடுகளின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், இதுவரை அந்த வீடுகளின் சுவர்கள் கட்டப்பட்டு, ஜன்னல்கள் மற்றும் கதவுகள், மின்சாரம், தண்ணீர் வசதிகள் மற்றும் நுழைவாயில்கள் கட்டி கட்டுமானம் முழுமையடையாத நிலையில் உள்ளது.

மண்சரிவினால் வீடுகளை இழந்த தோட்டத் தொழிலாளர்கள் எமலினா பிரிவில் குறைந்தபட்ச வசதிகள் கூட இன்றி தற்காலிக வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாக இப்பகுதியில் பெய்து வரும் மழையால் இந்த மக்கள் பெரும் துயர் மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.

மலையக மக்கள் இலங்கைக்கு வந்து 200 வருடங்களைக் கொண்டாடினாலும் நாட்டுக்கு டொலர்களை ஈட்டித்தரும் தோட்டத் தொழிலாளர்கள் தமது குடும்ப உறுப்பினர்களுடன் இன்னமும் அநாதரவாக இருப்பதைக் காட்டும் பிரவுன்ஸ்விக், எமிலினா பிரிவு தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் , இந்த 18 வீடுகளையும் விரைந்து முடித்து, அவர்களிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மஸ்கெலியா தினகரன் விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT