மத்திய வங்கியின் EPF பிரிவு முகாமையாளர் இடைநிறுத்தம் | தினகரன்

மத்திய வங்கியின் EPF பிரிவு முகாமையாளர் இடைநிறுத்தம்

 
பேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் விருப்பத்திற்கமைவாக செயற்பட்டதாக தெரிவிக்கப்படும் அதிகாரி ஒருவரை இடைநிறுத்துவதற்கு மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளதாக சட்ட மாஅதிபர் திணைக்களம் அறிவித்துள்ளது.
 
இவ்வறிவித்தலை, மத்திய வங்கியின் முறி வழங்கல் தொடர்பில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு, சட்ட மாஅதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
 
மத்திய வங்கியின், ஊழியர் சேமலாப நிதியத்தின் சிரேஷ்ட முகாமையாளரான, குறித்த அதிகாரி, தனியார் வங்கி ஒன்றுடன் மேற்கொள்ளப்பட்ட சர்ச்சைக்குரிய முறி தொடர்பிலான நடவடிக்கையின் போது, குறித்த வங்கியிடமிருந்து ரூபா 25 மில்லியன் (ரூபா 2.5 கோடி) கடன் தொகையை பெற்றுள்ளதாக அண்மையில் தெரியவந்தமை குறிப்பிடத்தக்கது.
 
இவ்வாறு அவர் பெற்ற கடன் தொடர்பில், அறிவிக்கப்படாத நிலையிலேயே குறித்த உத்தியோகத்தரை இடைநிறுத்த மத்திய வங்கி தீர்மானித்துள்ளதாக, பிணைமுறி தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு, சட்ட மாஅதிபர் திணைக்களம் அறிவித்துள்ளது.
 

Add new comment

Or log in with...