தென்னிந்திய நடிகரும், இயக்குனருமான ஆர் பாண்டியராஜன் இன்று (05) யாழ்ப்பாணம் வருகை தந்திருந்தார்.
அவர் யாழ்ப்பாணம் கொழும்புத்துறை இல 199 சுண்டுக்குழியில் அமைந்துள்ள மண்டத்தில் நடாத்தப்பட சிறப்பு பட்டிமன்றத்தில் கலந்து கொண்டார்.
மக்களுக்கு சினிமாவும், சீரியலும், வழிகாட்டுகின்றதா? வழிமாறுகின்றதா? என்ற தலைப்பில் பட்டிமன்றமும், இன்றைய சூழ்நிலையில் பிறகுக்கு உதவி செய்வது ஆபத்தே?ஆனந்தமே? என்ற தலைப்பில் பட்டிமன்றமும் இரண்டு அமர்வுகளாக இடம்பெற்றன.
இப் பட்டிமன்றத்தினை காண பல இடங்களிலும் இருந்து மக்கள் வருகைதந்தனர். இதில் கிருபா சாரதி பயிற்சிசாலை அதிபர் அ.கிருபாகரன், பட்டிமன்ற நடுவர் முனைவர் நெல்லை பி.சுப்பையா, கவிஞர் பிரிய நிலா உள்ளிட்ட பட்டிமன்ற பிரதிவாத அணிசேர் கலைஞர்கள் பலரும் பங்கெடுத்தனர்.
பு.கஜிந்தன்