Monday, May 6, 2024
Home » காத்தான்குடியில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி விநியோகம்

காத்தான்குடியில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி விநியோகம்

by Gayan Abeykoon
April 24, 2024 8:45 am 0 comment

ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைவாக குறைந்த வருமானம் பெறுகின்ற குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்கும் நிகழ்வு, நேற்றுமுன்தினம் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் ஏ.எல் எம்.அத்தாவுல்லா எம்.பி தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது

காத்தான்குடி பிரதேச செயலகப்பிரிவிலுள்ள புதிய காத்தான்குடி தெற்கு 167 சி கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள பல நோக்கு மண்டபத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது

இதில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த் காத்தான்குடி பிரதேச செயலாளர் உதய ஸ்ரீதர், உதவிப் பிரதேச செயலாளர் திருமதி சில்மியா, உதவி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.தனுஜா உட்பட கிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

நாடு பூராகவும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முகமாக குறைந்த வருமானம் பெறுகின்ற குடும்பங்களுக்கு தலா ஒரு குடும்பத்துக்கு 20 கிலோ என்ற அடிப்படையில் அரிசி வழங்கப்படவுள்ளன. இதில் முதற்கட்டமாக  10 கிலோ அரிசி மூட்டைகள் வழங்கி வைக்கப்பட்டன.

புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT