Saturday, May 4, 2024
Home » கடையடைத்து,கருப்பு கொடி பறக்கவிட்டு வீதியில் உருண்டு போராட்டம்

கடையடைத்து,கருப்பு கொடி பறக்கவிட்டு வீதியில் உருண்டு போராட்டம்

by Prashahini
April 21, 2024 9:31 pm 0 comment

பெருந்தோட்ட கம்பனிகள் பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1700/= ரூபாயாக அதிகரித்து வழங்க முன் வருவதற்கு ஏன் தயக்கம், அதேநேரத்தில் 1700/=ரூபாய் சம்பளம் தொடர்பாக தொழிற்சங்கங்கள் மற்றும் பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் இணைந்து நடத்திடும் பேச்சுவார்த்தையை ஏன் கம்பனிகள் புறக்கணித்தது? என்ற இன்னும் பல்வேறு கேள்விகளுடன் இன்று (21) இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஏற்பாட்டில் பொது அழைப்பு விடுக்கப்பட்டு மலைய நகரங்களில் சில மணிநேர கடையடைப்பு,கருப்பு கொடி பறக்கவிட்டு அறவழி போராட்டங்கள் பல நடத்தப்பட்டது.

மலையகத்தில் பிரதான நகருக்குள் படையெடுத்த தோட்ட தொழிலாளர்கள் தமது உழைப்புக்கான நாளாந்த ஊதியம் 1700/= ரூபாய் வழங்க வேண்டும் என பெருந்தோட்ட கம்பனிகளுக்கு எதிராக பேரணியிலும், போராட்டங்களிலும் குதித்தனர்.

அந்த வகையில் நுவரெலியா மாவட்டத்தில் நுவரெலிய கந்தப்பளை,இராகலை,உடப்புஸ்ஸலாவை,நானு ஓயா,கொட்டக்கலை ,பொகவந்தலாவை,அக்கரப்பத்தனை உள்ளிட்ட பல நகரங்களில் 1700/= ரூபாய் ஊதியம் உயர்வு தொடர்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டது.

இதன்போது கந்தப்பளை, இராகலை,உடப்புஸ்ஸலாவை, நானு ஓயா ஆகிய நகரங்களில் இடம்பெற்ற போராட்டங்களை இ.தொ.கா பிரதி தவிசாளரும் முன்னால் பாராளுமன்ற உறுப்பினருமான பி.இராஜதுறை மற்றும் முன்னால் நுவரெலியா பிரதேச சபை தவிசாளர் வேலு யோகராஜ் ஆகியோர் தலைமை தாங்கி நடத்தியதுடன் இதில் இ.தொ.கா மானில பிரதநிதிகள் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துக்கொண்டனர்.

* இதன்போது நியாயமான கோரிக்கையை வென்றெடுக்கும் வரை போராட்டம் தொடரும்,

*கம்பனிகளே தோட்ட தொழிலாளர்களை வைக்காதே! 1700/=சம்பளம் கொடு,

*அதிகாரிகளே தோட்ட தொழிலாளர்களின் உழைப்பை அடிக்காதே 1700/=கொடு,

*அராஜக கம்பனியே தோட்ட தொழிலாளர்களுக்கு 1700/= கொடு இல்லையேல் மலையகத்தை விட்டு வெளியேறு,

*கம்பனிகளே தொழிலாளர்களின் உரிமையை பறிக்காதே 1700/=ஊதியம் கொடு.

என மும் மொழிகளிலும் வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தி கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

அதேநேரத்தில் சில நகரங்களில் 1740/=ரூபாய் சம்பளம் வழங்கு என வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தி ஆர்பாட்டம் செய்தனர்,பல இடங்களில் 1700/= ரூபாய் சம்பளம் கொடு என பதாதைகளை ஏந்தி ஆர்பாட்டம் செய்தனர்.

மேலும் இராகலை நகரில் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் பேரணி நடத்தியும் வீதியை மறித்தும் ,வீதியில் அமர்ந்தும்,வீதியில் படுத்து உருண்டும் போராட்டம் செய்தமை குறிப்பிடத்தக்கது.

ஆ.ரமேஸ்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT