Friday, May 3, 2024
Home » சீன விமானங்களை குறைக்க கோரிக்கை

சீன விமானங்களை குறைக்க கோரிக்கை

by gayan
April 20, 2024 7:42 am 0 comment

சீனாவுக்கு மேலதிக விமானங்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டாமென அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க விமானங்களையும் விமானத்துறை ஊழியர்களையும் பாதிக்கும் வகையிலான கொள்கைகளை சீனா முன்னெடுப்பதாகக் குறிப்பிட்டு அந்நாட்டின் விமான சேவைகள் துறையைச் சேர்ந்த நான்கு அமைப்புகள் இக்கோரிக்கையை முன்வைத்திருப்பதோடு அமெரிக்க விமானத்துறையினதும் அதன் ஊழியர்களதும் நலன்கள் உத்தரவாதப்படுத்தப்படும் வரை இரு நாடுகளுக்கும் இடையில் மேலதிக விமானங்களை சேவையில் ஈடுபடுத்துவதை நிறுத்துமாறும் கோரியுள்ளது.

கொவிட் பெருந்தொற்றுக்கு பின்னர் விமான சேவைகளைப் படிப்படியாக மீட்டெடுக்கவென அமெரிக்காவுக்கான நேரடி பயணிகள் விமானங்களை மேலும் அதிகரிக்க சீன விமான நிறுவனங்களுக்கு அனுமதிப்பதாக அமெரிக்கா அறிவித்த விரைவில் இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT