Home » புத்தளம் ஸாஹிரா பாடசாலையின் வருடாந்த ஒன்றுகூடல்

புத்தளம் ஸாஹிரா பாடசாலையின் வருடாந்த ஒன்றுகூடல்

by Gayan Abeykoon
April 19, 2024 6:56 am 0 comment

புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலையின் ஸஹீரியன்ஸ் 92 மாணவர்களின் வருடாந்த ஒன்றுகூடலும், இராப்போசன விருந்தும், பொதுக் கூட்டமும் அண்மையில் நடைபெற்றது. இதில் சுமார் 32 பழைய மாணவர்கள் கலந்துகொண்டனர். பல்வேறு விடயங்கள் இதன்போது கலந்தாலோசிக்கப்பட்டன.

சமூகத்தில் இருக்கின்ற குறைபாடுகள், சமூக மேம்பாட்டு நலத்திட்டங்கள், பாடசாலை அபிவிருத்தி  திட்டங்கள், பாடசாலையில் காணப்படும் குறைபாடுகள் என பல விடயங்கள்  ஆலோசிக்கப்பட்டன. இஸட் 92  அமைப்பின் நடப்பு வருட நிர்வாக தலைவராக கலாநிதி இல்ஹாம் மரிக்கார் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.

செயலாளராக மின்ஹாஸ் மஹ்மூட்டும், பொருளாளராக எம். காதரும், ஊடக இணைப்பாளராக பாரூக் பதீன் ஆசிரியரும் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டனர்.

புத்தளம் தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT