கல்வியிலுள்ள ஏற்றத் தாழ்வுகளை அகற்றி சகல பாடசாலைகளையும் ‘சக்வல’ திட்டத்தினூடாக ஸ்மாட் பாடசாலைகளாக கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை எடுப்போமென எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ (15) தெரிவித்தார்.
சக்வல பிரபஞ்சம் திட்டத்தின் கீழ் ஹம்பாந்தோட்டை ஸாஹிரா தேசிய பாடசாலைக்கு சுமார் 12 இலட்சம் ரூபா செலவில் எதிர்க்கட்சித் தலைவரினால் வழங்கப்பட்ட 156ஆவது திறன் வகுப்பறையை திறந்துவைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவினால் பாடசாலையின் வாத்திய குழுவினரின் சீருடைக்காக பாடசாலை அபிவிருத்திச் சங்கத்திற்கு ஒரு இலட்சம் ரூபா பணமும் அன்பளிப்பு செய்யப்பட்டதோடு பாடசாலை நூலகத்திற்கு இதன்போது அகராதிகளும் அன்பளிப்பு செய்யப்பட்டன.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ,
சக்வல திட்டத்தினூடாக பாடசாலைகளை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுப்பதுபோன்றே வைத்தியசாலைகளுக்குத் தேவையான உபகரணங்களையும் வழங்கி வைத்தியசாலைகளையும் கட்டியெழுப்ப நாம் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.
ஹம்பாந்தோட்டை குறூப் நிருபர்