Sunday, May 19, 2024
Home » Huawei ICT போட்டி 2023–2024 உலகளாவிய இறுதிப் போட்டிக்கு முன்னேறிய மொரட்டுவை பல்கலைக்கழக அணி

Huawei ICT போட்டி 2023–2024 உலகளாவிய இறுதிப் போட்டிக்கு முன்னேறிய மொரட்டுவை பல்கலைக்கழக அணி

by Rizwan Segu Mohideen
April 15, 2024 11:47 am 0 comment

Huawei ICT போட்டி 2023 – 2024 இன் Huawei ICT போட்டி 2023-2024 உலகளாவிய இறுதிப் போட்டிகள் மற்றும் பிராந்திய விருது வழங்கும் விழாவிற்கு மொரட்டுவை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த குழுவினர் வெற்றிகரமாக முன்னேறியுள்ளனர் என்பதை Huawei Sri Lanka மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது. இது ஒரு வரலாற்றுத் தருணமாகும் என்பதுடன், Huawei ஆசிய பசுபிக் இறுதிப் போட்டியில் இலங்கையிலிருந்து ஒரு அணி நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவது இதுவே முதன் முறையாகும்.

மொரட்டுவை பல்கலைக்கழக அணி, பிராந்திய Huawei ICT போட்டி 2024 இன் Cloud Track இல் ஒப்பிட முடியாத திறன்களையும் நிபுணத்துவத்தையும் வெளிப்படுத்தியிருந்தது. அந்த வகையில், இந்தோனேசியாவில் நடைபெறவுள்ள ஆசிய பசிபிக் இறுதிப் போட்டிகள் மற்றும் விருது வழங்கும் விழாவில் ஒரு இடத்தைப் பெறுவதற்கு அவர்களுக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விருது வழங்கும் விழாவில், அணியின் இறுதித் தரவரிசை அறிவிக்கப்படும்.

மொரட்டுவை பல்கலைக்கழக அணி ஆசிய பசிபிக் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த, Huawei Enterprise Business Group இன் பிரதித் தலைவர் Ni Xiaopeng, இந்த சாதனையானது மாணவர்கள், கல்வியாளர்கள், பரந்த கல்விச் சூழல் தொகுதி ஆகியவற்றின் கூட்டு முயற்சிகளுக்கு ஒரு சான்றாகும் என வலியுறுத்தினார். அது மாத்திரமன்றி, மாணவர்களால் வெளிப்படுத்தப்பட்ட ஒப்பற்ற திறமை மற்றும் அர்ப்பணிப்பு, அத்துடன் மொரட்டுவை பல்கலைக்கழகம் மற்றும் ஒட்டுமொத்த இலங்கையும் வழங்கிய ஆதரவான கல்விச் சூழலையும் அவர் இதன்போது பாராட்டினார்.

இலங்கையிலும் அதற்கு அப்பாலும் திறமைகளை வளர்ப்பதற்கும் புத்தாக்கங்களை வளர்ப்பதற்கும் Huawei இன் அர்ப்பணிப்பை Ni Xiaopeng மீண்டும் வலியுறுத்தினார். மாணவர்கள் போட்டியிடுவதற்கும், கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதற்கும், அவர்களின் ICT அறிவு மற்றும் நடைமுறை ரீதியான திறன்களை மேம்படுத்துவதற்கும் ஒரு சர்வதேச தளமாக, Huawei ICT போட்டியின் முக்கியத்துவத்தை சுட்டிட்டுக் காட்டினார். ஆரோக்கியமான போட்டி மற்றும் யோசனை பரிமாற்றம் மூலம், புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் தளங்களைப் பயன்படுத்தி புத்தாக்கங்களை உருவாக்க மாணவர்கள் வலுவூட்டப்பட்டுள்ளனர்.

மொரட்டுவை பல்கலைக்கழகக் குழுவின் சாதனையானது அதன் மாணவர்களின் குறிப்பிடும்படியான திறமை மற்றும் அர்ப்பணிப்பு, பல்கலைக்கழகம் மற்றும் இலங்கை ஆகிய இரண்டினதும் வலுவூட்டப்பட்ட ஆதரவான கல்விச் சூழலையும் கோடிட்டுக் காட்டுகிறது. இந்த முக்கியமான மைல்கல்லை Huawei மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்று கொண்டாடுகிறது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT