Sunday, May 12, 2024
Home » கொழும்பு – பதுளை 100 வருட புகையிரத உறவு

கொழும்பு – பதுளை 100 வருட புகையிரத உறவு

- 'துன்ஹிந்த ஒடிஸி' புகையிரத சேவை ஆரம்பம்

by Rizwan Segu Mohideen
April 5, 2024 12:20 pm 0 comment

கொழும்பு – பதுளை இடையிலான புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டு 100 வருடங்கள் நிறைவடைவதையிட்டு, இன்று காலை 6.30 மணியளவில் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து ‘துன்ஹிந்த ஒடிஸி’ எனும் விசேட புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து பதுளைக்கான இந்த விசேட சொகுசு ரயில் சேவையை போக்குவரத்து மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

சர்வமத அனுஷ்டானங்களுடன் மதத் தலைவர்களின் ஆசியுடன் இவ்விசேட புகையிரத சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில், சுற்றுலாத்துறை ஆற்றி வரும் பங்கிற்கு இந்த புகையிரத சேவையும் பங்களிக்கும் என, அமைச்சர் பந்துல குணவர்தன இதன் போது குறிப்பிட்டார்.

வார நாட்களில்

  • (இல 1001) கொழும்பு கோட்டை – பதுளை: மு.ப. 6.30 – பி.ப. 5.37
  • (இல 1002) பதுளை – கொழும்பு : மு.ப. 8.00 – பி.ப. 6.51 

1ஆம், 2ஆம் வகுப்பு பெட்டிககளை கொண்ட இந்த புகையிரதத்தில், பயணச் சீட்டுக்கான கட்டணம்

  • 1ஆம் வகுப்பு ரூ. 8,000
  • 2ஆம் வகுப்பு ரூ. 6,000
  • 3ஆம் வகுப்பு ரூ. 5,000

இந்த புதிய சொகுசு சுற்றுலா புகையிரதத்திற்கான ஆசன முன்பதிவுகளை ஒன்லைனில் மேற்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. seatreservation.railway.gov.lk/mtktwebslr/

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT