Tuesday, May 14, 2024
Home » புரட்சியாளர்களின் பிள்ளைகள் தனியார் கல்வியால் பயனடைகின்றனர்

புரட்சியாளர்களின் பிள்ளைகள் தனியார் கல்வியால் பயனடைகின்றனர்

- நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் ஆங்கில கல்வி அவசியம்

by Prashahini
March 16, 2024 12:51 pm 0 comment

எமது நாட்டின் கல்வித்துறையில் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் போது, இலவசக் கல்வியைப் பாதுகாப்பதற்கான பொய்யான அமைப்புகள் உருவாக்கப்பட்டு, ஆசிரியர்கள், அதிபர்கள், மாணவர்கள் வீதியில் இறக்கப்படலாம். “சஜித்தின் இந்த முன்மொழிவுகள் இலவசக் கல்விக்கு தடையாக இருப்பதாக” புரட்சியாளர்கள் போலியான செய்திகளை உருவாக்கலாம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அரச பாடசாலைகளுக்கு ஸ்மார்ட் வகுப்பறைகளை வழங்குவதில் இலவசக் கல்வி பாதுகாக்கப்படுமா அல்லது அழிக்கப்படுமா என்பதை மக்கள் அறிவார்ந்த முறையில் சிந்தித்து அறிய வேண்டும். வெளிநாட்டு கொள்கைகளை கொண்டு வந்து கன்னங்கராவின் இலவசக் கல்வியை சஜித் மாற்றியமைக்கிறார்’ என்று சொல்லும் அந்த புரட்சியாளர்களின் பிள்ளைகள் தனியார் பாடசாலைளிகளிலும், தனியார் பல்கலைக்கழகங்களிலும், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களிலும் கற்றல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தமது பிள்ளைகள் தனியார் கல்வி நிறுவனங்களில் தரமான உயர்கல்வியைப் பெறும் போது, நாட்டின் ஏனைய பிள்ளைகளுக்கும் அதே தரமான உயர் கல்விக்கான வாய்ப்பை வழங்க நடவடிக்கை எடுக்கும் போது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 124 ஆவது கட்டமாக 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், கொழும்பு, கடுவெலை, ஸ்ரீ சோமானந்த மகா வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (15) இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில், ​​கல்லூரியின் நடனம் மற்றும் அரங்கேற்றங்கள் குழுவினருக்குத் தேவையான ஆடைகளைப் பெறுவதற்குத் தேவையான ஒரு இலட்சம் ரூபா நிதியையும் நன்கொடையாக வழங்கி வைத்தார்.

கன்னங்கரா இலவசக் கல்வியை அறிமுகப்படுத்திய போது, இதற்கு எதிராக குரல் எழுப்பிய உயரடுக்கு வர்க்கத்தினர் அன்றும் இருந்தனர். இந்தப் புதிய கல்வி முறைமை நடைமுறைப்படுத்தப்படும்போது, ​​தற்போதைய புரட்சியாளர்களும் கூட இப்படி முட்டாள்தனமான விடயங்களை கூறி வருகின்றனர்.

உண்மையான தேசபக்தராக இருந்தால், தரமான கல்விக்காக முன்நிற்க வேண்டும். நாட்டின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு, அரசியல் சுதந்திரத்தைப் பாதுகாப்பதே தேசபற்றின் உண்மையான அர்த்தப்பாடாகும். இதில் இராணுவ பாதுகாப்பு மட்டுமடங்காது. உணவுப் பாதுகாப்பு, உயர்தரக் கல்வி மற்றும் தரமான சுகாதார வசதிகளும் இங்கு பேணப்பட வேண்டும். உண்மையான நாட்டுப் பற்று இருந்தால், 10126 அரச பாடசாலைகளைச் சேர்ந்த 41 இலட்சம் மாணவர்களுக்கும் உயர்தரத்தில் அமைந்த நவீன கல்விக்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்ளும் மனோபாவம் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பட்டதாரிகள் அரசியல்வாதிகளுக்கு பின்னால் செல்வதை நிறுத்த வேண்டும். ஆனால், தற்போதைய உலகத்துடன் ஒத்துப்போகாத கல்விமுறைமையே நமது நாட்டில் உள்ளது. முறையான கல்வி முறை இருந்தால், பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புக்கு பஞ்சம் இருக்காது. வரிசைகளில் நிற்க வேண்டிய தேவை ஏற்படாது. வெளிநாடுகளில் தனியார் துறையினர் கூட பட்டதாரிகளைத் தேடி திறமையானவர்களை தமது நிறுவனங்களில் சேர்த்துக் கொள்கின்றனர். ஆனால் எமது நாட்டில் பட்டதாரிகள் அரசியல்வாதிகளின் பின்னால் செல்கின்றனர். இந்நிலை மாற வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஆங்கிலக் கல்வியை சில தரப்பினருக்கு மட்டும் என மட்டுப்படுத்த முடியாது. கட்டாய ஆங்கில மொழிக் கல்வி என்பது நாட்டின் தலைநகரில் உள்ள உயரடுக்கு குடும்பங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றாக இருக்கக்கூடாது.இருக்கவும் முடியாது.

நாட்டில் உள்ள அனைத்து 10,126 அரச பாடசாலைகளிலும் இதற்கான உரிமை இருக்க வேண்டும். ஆனால் தற்போது இதற்கான உரிமை உள்ளது. மனித உரிமை மீறப்பட்டுள்ளதாகவே இதை கருத வேண்டியுள்ளது.

25 இலட்சம் பெண்களுக்கு முறையான ஆரோக்கியத் துவாய் சுகாதார வசதிகள் இல்லை.

நாட்டில் உள்ள 25 இலட்சம் பெண்களுக்கு முறையான ஆரோக்கியத் துவாய் அடங்கலான சுகாதார வசதிகள் இல்லாமல் உள்ளனர். கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய், சிறுநீரகத் தொற்று போன்றவற்றின் பரவல் அதிகரித்தமையினால், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இது குறித்து நேர்மையாகப் பேசியபோது, தம்மீது சேறுபூசி அவமானப்படுத்தினர். ஸ்கொட்லாந்திலும் நியூசிலாந்திலும் இதே வசதிகள் இலவசமாக வழங்கப்பட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT