Monday, May 20, 2024
Home » ஐரோப்பிய சுகாதார மற்றும் பாதுகாப்பு தர சான்றிதழைப் பெற்ற SplashBay

ஐரோப்பிய சுகாதார மற்றும் பாதுகாப்பு தர சான்றிதழைப் பெற்ற SplashBay

by Gayan Abeykoon
March 14, 2024 11:00 am 0 comment

பண்டாரகமவில் அமைந்துள்ள புத்தாக்கம் நிறைந்த நீர்ப் பூங்காவான பேர்ள் பே இல் உள்ள SplashBay தனது முதலாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் நிலையில் TUVNOD இடமிருந்து மதிப்புக்குரிய ஐரோப்பிய சுகாதார மற்றும் பாதுகாப்புத் தரச் சான்றிதழைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

டேவிட் பீரிஸ் குழுமத்தின் புகழ்பெற்ற உறுப்பினரான பேர்ள் பே, நீர்ப் பூங்கா, சான்றிதழ் பெற்ற ஓய்விடம், முறைசார் கார்ட்டிங் பாதை மற்றும் காற்றுத் துப்பாக்கி சுடும் பிரதேசம், அம்பு விடும் பிரதேசம் போன்ற பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்டுள்ளது.

இந்தச் சான்றிதழானது பேர்ள் பேக்கு ஒரு குறிப்பிடத்தக்க வெற்றியை எடுத்துக்காட்டுவது மட்டுமல்லாம், பொழுதுபோக்கு மற்றும் ஓய்வுத்துறையில் சிறந்து விளங்குதல், பாதுகாப்பிற்கான அதன் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை எடுத்துக் காட்டுகிறது.

பேர்ள் பேயானது கடந்த ஒரு வருடத்தில் பரபரப்பை விரும்பும் மற்றும் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரத்தைக் களிக்க விரும்புபவர்களுக்கு முன்னணி இடமாக மாறியுள்ளது.

இங்குள்ள வசதிகளில் தரம் மற்றும் பாதுகாப்பு என்பன கடுமையான ஐரோப்பிய தரத்துக்கு அமைய பின்பற்றப்படுகின்றன என்பதற்கு எடுத்துக் காட்டாக TUVNOD இன் சான்றிதழ் அமைந்துள்ளது.

TUVNOD  ஒரு மரியாதைக்குரிய ஜெர்மன் சான்றிதழ் அமைப்பு என்பதுடன், இது மனிதர்கள், பொருள் சொத்துக்கள் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் பாதுகாப்பைச் சரிபார்ப்பதில் நிபுணத்துவம் பெற்றதாகும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT